தேவனால் அழைக்கப்பட்ட மனிதன்
God-Called Man
58-10-05E
Jeffersonville Indiana U.S.A.

1. நெவில். உங்களை சுவர் ஓரமாக நிற்க வைத்து கொண்டிருப்பதற்காக நான் வருந்துகிறேன். இன்றொரு முன்னேற்பாடின்படி சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு நான் இந்த வழியாய் கடந்து போக வேண்டியிருந்தது. அப்பொழுது ஜனங்கள் வாசலில்லிருந்து திரும்பி போய்க்கொண்டிருந்ததை கண்டேன். நான் அங்கே வெளியே பில்லியை சந்தித்தேன், அவன் சொன்னான்; “இன்று பிற்பகலில் இருந்து இந்த இடமானது ஆராதனைக்கு ஆயத்தமாய் இருந்தது: எனவே இந்த சிறிய கூட்டத்தை நாங்கள் இங்கே வைத்தோம். உள்ளூர் பத்திரிக்கையில்கூட நாங்கள் விளம்பரம் செய்யவில்லை. ஆகையினால் நமக்கு ஒரு சிறிய நேரம் ஐக்கியம் உண்டாயிருந்தது.
2. இப்பொழுது, எப்பொழுதும் போல சந்தடியாகவே இருக்கிறது, இந்தப் பட்டணத்திற்கு வெளியே இருந்து வருபவர்களுக்கு அது தெரியும். இந்த இடத்தில ஜனங்கள் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்கு போய்க் கொண்டும், நெருக்கி கொண்டும் இருப்பார்கள். ஆகையினால் இது எனக்கு ஒரு விதமாக பழகி போய்விட்டது, என்னை அவ்வளவு அதிகமாக தொந்தரவு படுத்தாத நிலைவருமட்டாய் நான் ஒரு இடத்திற்கு போக மாட்டேன். உங்களுக்கு தெரியும் நீங்கள் சிறிது நேரத்தை, ஏன் அதிகமான நேரத்தை கர்த்தரோடு செலவழிக்க வேண்டும், நீங்கள் அதை செய்யவில்லை என்றால் பரிசுத்த ஆவியின் புத்துணர்ச்சியோடு உங்களால் கூட்டத்திற்குள் வரமுடியாது. இது போன்று நீங்கள் உள்ளே வரும் போது அது ஒரு மகத்தான வசீகரிப்புமாபோலிருந்து, சில சமயங்களில் எனக்கு உள்ளே வருவதே ஒரு விதமாக கடினமாக இருக்கும். சிறிது கிள்ளி விடுவது தள்ளுவது போன்றதை தவிர்க்க முடியாதது போன்று இருக்கும். பாருங்கள், அது என்னை சற்று லேசாய் நிலைவேறாக்கும். நான் அதை செய்யும் போது என்னால் பரிசுத்த ஆவியானவரை அங்கு எங்குமே காண முடியாது.
3. எனவே திட்டுகளிலும் சுற்றிலுமாய் நின்று கொண்டிருக்கிறவர்களுக்காக நான் வருந்துகிறேன். அவர்கள் மேலே வருகிறார்கள் உள்ளே பார்க்கிறார்கள் அவர்களுடைய வாகனங்களில் ஏறிக்கொண்டு திரும்பிப் போய் விடுகிறார்கள், ஒரு சில கூட்டங்கள் நடத்துவதற்காக நான் அந்த உயர்நிலைப்பள்ளி எடுக்கலாம் என்று இருந்தேன், ஆனால் இந்த நேரத்தில் பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அதை பெறுவது என்பது எனக்கு சற்று கடினமான காரியம். ஆனால் உள்ளேயும் வெளியிலும் இருக்கின்ற உங்கள் ஒவ்வொருவரையும் உங்களுடைய அருமையான ஒத்துழைப்பு காகவும் நீங்கள் செய்த எல்லாவற்றிக்காகவும் நான் உங்களை நிச்சயமாக பாராட்டுகிறேன் என்பதை நான் கூறவிரும்புகிறேன்.
4. இன்று காலையில் ஞாயிறு பள்ளியில் கடந்த இரவு எனக்கு கொடுக்கப்பட்ட காணிக்கைக்காக நான் ஜனங்களுக்கு நன்றி தெரிவித்தேன். அது ஒரு கேட்டுக் கொள்ளப்படாத காணிக்கையாய் இருக்கிறது. வெளிப்படையாக கூறினால் இங்கே இருக்கின்ற போதகர் நம்முடைய அன்புக்குரிய சகோதரர் நெவில் இன்று மற்றவரிடத்தில் அதை அவர்கள் செய்யாதிருப்பதை நான் விரும்புகிறேன் என்று கூறி உள்ளேன், ஆனாலும் அவர்கள் செய்தார்கள், ஆகவே அது பற்றி அறிவிக்க நான் விரும்பினேன். இப்பொழுது, இது ஒரு சிறிய இடம் இதில் 300 பேர்களுக்கு மேல் உட்கார முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் காணிக்கையோ 324 டாலர்கள் அது என்ன காட்டுகிறது என்றால், சராசரி ஒருவருக்கு ஒரு டாலர் கணக்காகிறது. என்னுடைய ஜீவியத்திலேயே; இருக்கும் ஜனங்கள் மத்தியில் இது தான் எனக்கு கொடுக்கப்பட்ட மேலான காணிக்கை ஆகும், வழக்கமாக அது சராசரி ஒரு நபருக்கு 24 சென்டுகள் தான் வரும் 25 சென்டுகள் அல்லது 27 சென்டுகள் (ஒரு டாலரில் 100 Cents சென்டுகள் உள்ளன) ஒரு நபருக்கு காணிக்கையாக வந்தால் அது ஒரு பெரிய காணிக்கையாகும். ஆனால் இந்த காணிக்கை சராசரி ஒரு நபருக்கு ஒரு டாலராக இருக்கிறது நான் நிச்சயமாக அதை பாராட்டுகிறேன்.
5. இக்காலையில் உங்களில் சிலருக்கு வெளிப்படுத்தி காட்ட ஒருக்கால் என்னால் செய்ய முடியவில்லை. படிகளில் பெட்டி நிறைய பழச்சாறு காட்சியிருந்தது, அது எங்களுக்கு அனுப்பப்பட்ட சில வெகுமதிகள், நானும் என் மனைவியும் எங்களுடைய நன்றியறிதலை ஜனங்களாகிய உங்களுக்கு செலுத்த விரும்புகிறோம், எப்படி என்று எங்களால் மேலாக அறிந்த மட்டில் நாங்கள் நன்றி கூறுகிறோம் அவை எல்லாமும் தேவனுடைய ராஜ்யத்திற் காகவே இருக்கட்டும். இது எனக்கு எப்பேர்ப்பட்ட உணர்வை கொடுக்கிறதென்றால்,
6. நமக்கு மட்டும் ஒரு பெரிய இடம் இருந்து, நம்மால் அதிக நேரம் தொடர்ந்து இருந்து ஜனங்களுக்கு ஊழியம் செய்து இருந்தால் நலமாய் இருக்கும் என விரும்புகிறேன், ஆனால் இன்றிரவும்கூட ஆராதனைக்கு பின்னர் நான் போக வேண்டியவனாய் இருக்கிறேன், ஆனால் இன்றிரவும்கூட என்னால் போக முடியாது, ஆனால் விடியற்காலையில் என்னால் போய்விட முடியும்.
7. அடுத்த சனி இரவு நான் திரும்பி வந்துவிடுவேன் மீண்டுமாய் ஞாயிறு காலையில் கொலடோராவிற்கு போய் விடுவேன், இந்த இரவிற்கு அடுத்த இரவு போகின்றேன்.
8. அதற்கு பிறகு என்னுடைய அடுத்த கடல் கடந்த கூட்டம் ஜனவரியில் இருக்கிறது அது ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அங்கிருந்து தொடர்ந்திருக்கும், இப்பொழுது நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், நான் நிச்சயமாக உங்களுடைய ஜெபங்களை வாஞ்சிக்கிறேன்.
9. பின்னர், நாம் எல்லாருமாக சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி உள்ளவளாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சிறிய கூட்டத்தில் அவர் நமக்காக அவ்வளவு மகத்தான காரியங்களை செய்துயிருக்கின்றார். நான் நினைக்கிறேன் என் ஜீவியத்தில் இந்த ஜெப கூடாரத்தில் நான் நடத்தின கூட்டங்கள் எல்லாவற்றை காட்டிலும் நாம் செலவழித்த நேரத்திற்கு இக்கூட்டத்தில் அதிகமான காரியங்களில் செய்து முடிக்கப்பட்டன. தேவன் அப்படியே ஆசீர்வாதங்களை திறந்து விட்டார் போன்றிருக்கிறது.
10. இந்த கூட்டங்களின் போது எனக்கு கிடைத்த தரிசனங்களில் இருந்து, ஒருக்கால் என்னுடைய ஊழியம் ஒரு மேலானதும் மகத்தானதுமான ஊழியமுமாக மாறப்போகிறது என்று நான் நினைக்கிறேன், எப்படி இந்த மற்ற மூன்று அல்லது இரண்டு உழியங்களும் முன் அறிவிக்கப்பட்டதை ஜனங்களாகிய நீங்கள் கேட்டது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவாக இதுவும் அப்படியே சம்பவிக்க போகிறது, இதுவும் அதை போன்றே இருக்கும் மகத்தானதாய் இருக்கும். ஆனால் முதலாவது நாள் இரவு நான் ஜனங்களை பீடத்தன்டை வரும்படி அழைத்தேன் அப்படி நேராக வகையறுத்தலுக்கு சென்றேன். இரண்டாவது இரவு நான் அவர்களை நேராக அறைக்குள் அழைத்துச் சென்று நேராக அப்படியே வகையறுத்தலுக்கு சென்றேன். அதற்குப் பின்னர் கடைசி இரண்டு இரவுகளும் அவர்களை நேராக இங்கே மேடையின் மேல் கொண்டு வந்து அப்படியே வகையறுத்தலுக்கு சென்றேன்.
11. ஆனால் அறிவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு குருடான ஊழியக்காரன் அவருடைய பார்வையை மேடையின் மேல் பெற்றுக்கொண்டான்.
12. எந்த ஒரு வைதியனுக்கும் தெரியாத ஒருவருக்கும் என்னவென்று தெரியாத வியாதியோடுகூட, இரண்டு சிறு பெண்கள் சக்கர நாற்காலியில் நேற்றிரவு உட்கார்ந்து இருந்தனர். அவர்களுடைய பாதங்கள் பெரிதாகி கொண்டே போகிறது அவர்களுடைய கால் விரல்கள் கீழ்நோக்கி தொங்குகிறது விரல்கள் கீழ்நோக்கி தொங்குகிறது அவர்களுக்காக ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆவியானவர் அபிஷேகித்துக்கொண்டு இருக்கையில் நான் அங்கே போய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அந்த வியாதியை நான் சபித்தேன். அப்படியே அவர்கள் சக்கர நற்காலியை விட்டு வெளியே வந்தனர், இன்று காலையில் சபைக்கு உள்ளாக மற்ற பிள்ளைகளைப் போன்று சுற்றி நடந்து கொண்டு இங்கே வந்து இக்காலையில் இங்குள்ள தண்ணீர் தொட்டியில் கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர்.
13. கொஞ்சம் முன்பு நான் ஒரு சில நிமிஷங்கள் தியானித்து கொண்டிருக்கையில் என்னுடைய சில நண்பர்கள் சகோதரன் ஹுவர் கென்டக்கியில் இருந்து வந்த ஒரு ஊழியக்காரன் இந்த வழியாய் கடந்து போகையில் என்னுடைய மனைவியிடம் ஒரு சிறு குறிப்பு எழுதி இருந்தார். அதாவது கடந்த இரவு பெயர் கூறி அழைக்கும் வரிசையில் ஜனங்கள் மத்தியில் ஜெப அட்டையோ அது எதுவுமில்லாமல் ஒரு ஸ்திரி உட்கார்ந்து கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தாளாம், அங்கே இன்னொரு ஸ்திரி சாப்பிடாமலே இருந்தாளாம், எத்தனை நாள் என்று எனக்கு ஞாபகம் இல்லை. அவளுடைய வயிற்றில் வளர்ச்சி ஏற்பட்டு நிறைக்கப்பட்டு இருந்ததாம். கர்த்தர் அவளை அழைத்து அவரை சுகப்படுத்தினார். இன்று காலையில் அவள் எழும்பி சாதாரண அளவு காலை ஆகாரத்தை புசித்தாளாம். இன்றிரவு அவள் இங்கு எங்கோ இருக்கிறாள்.
14. மற்றவர்களும்கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், ஓ நம்முடைய கர்த்தர் செய்த காரியங்களை சொல்லிக் கொண்டே போனால் நேரமே போதாது, எனவே அது மிகவும் சமீபமாய் இருக்கிறது ஏதோ மகத்தான காரியம் சம்பவிக்க இருக்கிறது என்பதை அறிய நமக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.
15. நேற்று மாலை ஆராதனைக்கு பிறகு செய்திக்கு பின்னர் நேற்று இரவு பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை அபிஷேகித்ததைக் காட்டிலும் அதிகமாக செய்ததை நான் ஒரு போதும் எந்த நேரத்திலும் கண்டதே இல்லை. அப்படிப்பட்ட இன்னொன்றை இன்று இரவு நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
16. இப்பொழுது எனக்காக ஜெபியுங்கள், தேவனுடைய சில ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தைகளை நான் வாசிக்க விரும்புகிறேன். வார்த்தையை நாம் வாசிப்பதற்கு முன்பாக நம்முடைய தலைகளை சிறிது நேரம் வணங்கியவாறு இருக்க அவரிடத்தில் நாம் சில வார்த்தைகளை பேசுவோமாக.
17. அன்புள்ள பரலோக பிதாவே இன்று இரவு நாங்கள் உம்மிடத்தில் வருகிறோம், ஒருக்கால் சரீர பிரகாரமாக சற்று களைத்துப் போனவர்களாய் ஆனால் ஓ, எங்களுடைய ஆவிகள் எவ்வளவாய் புத்துயிர் பெற்றிருக்கிறது. தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நம்மை அவர் ஆசிர்வதிக்கிறார், அவர் வக்களித்தவைகளை அவர் நமக்கு அபரிவிதமாய். அதாவது நாம் செய்வதற்கும் அல்லது நினைப்பதற்கும் மேலாக கொடுக்கிறார் என்பதே ஜீவிக்கிற தேவனுடைய அடையாளங்கள். உம்மடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவருடைய பார்வையில் நாங்கள் கிருபை பெற்றிருக்கிறோமானால் உம்முடைய ஆவியின் இரட்டத்தனை பங்குடன் நீர் இன்று இரவு எங்களை வந்து சந்திக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அது மகத்தான வல்லமையோடு பொழிவதாக. இங்கிருக்கும் ஒவ்வொரு நபரும் மேலும் அதிகமதிகமாய் பொழிந்து அவர்கள் சுவிசேஷத்தைப் விசுவாசிக்கவும் பரிசுத்த ஆவியின் வல்லமையை அவர்களுடைய ஜீவியத்தில் அவர்கள் பெற்றுக் கொள்ளவும் செய்வதாக. கர்த்தாவே இன்றிரவு இரட்சிக்கப்பட கூடியவர்களை இரட்சியும், சுகமடைய ஆயத்தமாய் இருக்கின்றவர்களை சுகப்படுத்தும். இதை அருளும் கர்த்தாவே.
18. ஜனங்கள் உள்ளே நெருக்கிக் கொண்டும் கதவுகளில் நின்று கொண்டும் இருக்கிறதையும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறிய சபையாய் இருப்பதனால் திரும்பி போவதையும் நாங்கள் காண்கையில். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை அது நினைவுபடுத்துகிறது. அதாவது மாமிச ரூபத்தில் அவர் நம்மை இங்கே சந்தித்த போது நெருக்கம் அவ்வளவு அதிகமாய் இருந்தபடியினால் அவரிடத்தில் ஒரு மனிதனை கொண்டுப் போககூட வழியில்லாமையால் கூரையின் மூலமாக அவரிடத்தில் அவனை கொண்டு வர வேண்டியதாயிற்று. இன்று இவ்விதமாய் நெருக்கி கொண்டு வந்திருக்கின்ற ஒவ்வொருவரையும் இன்றிரவு தேவன் அந்த மனிதனுக்கு கிடைத்தது போன்றதான பலனை பெற வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்.
19. நாங்கள் வாசிக்கையில் உம்முடைய வார்த்தையை நீர் ஆசீர்வதியும் அது எங்கள் பாதைக்கு ஒரு வெளிச்சமாயும் ஒரு தீபமாயும் இருப்பதாக. நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் ஆமென்.
20. [யாரோ ஒருவர் சகோதரர் பிரன்ஹாமுடன் பேசுகிறார் - ஆசி.] இல்லை ரோசெல்லா கிரிஃபித்? ["ஆம்."]
21. இப்பொழுதுதான் இது எனக்கு அறிவிக்கப்பட்டது, அதாவது நான் இன்று காலையில் பெயர் சொல்லி அழைத்தேனே. சிகாகோ கூட்டத்தில் ஒரு குடிகாரி பெண் என்று கூட்டத்தில் அழைக்கப்பட்டாளே. அது எப்படி என்றால் அவள் மாடியில் அலங்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவளிடம் பேசி: அவள் தான் ஒரு குடிகாரி என்று கூறினாள். சிகாகோவில் இருந்த ஐந்து மகத்தான வைத்தியர்கள் அவளுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிட்டார்கள். குடி போதை பழக்க இரட்சண்ய சங்கமும் அவளை கைவிட்டது. கர்த்தர் உரைக்கிறதாவது என்று அவள் அழைக்கப்பட்டாள் அவள் சுகமாக்கப்பட்டாள் அந்நேரத்துக்கு பின்னர் அது வேண்டும் என்ற ஆவலே அவளுக்கு இல்லாமல் போயிற்று.
22. அவளுக்கு மேலாக அலங்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு அம்மாள், அவள் இவளுடைய சிநேகிதி அவள் காலுமேட் பட்டினத்தில் வசிக்கிறாள். அது என்னவென்று யாருக்காவது தெரியுமானால் நலமாயிருக்கும். அது தான் எல்லைக்கோட்டில் உள்ளவர்கள். பாரிஸ் பிரான்ஸை காட்டிலும் அது மோசமானதாக இருக்கிறது அங்கே எல்லா வித பொல்லாத காரியங்களும் நடந்து கொண்டிருக்கிறது. அவள் ஒரு போதை மருந்து வியாபாரம் செய்பவள் என்றும், பிரெட்-அஸ்டருக்கு அவள் ஒரு நடனக்காரியென்றும் ஆவியானவர் கூறினார். அவளுடைய, “தகப்பனார் அதற்கு மறுப்புத்தெரிவித்தார்” ஆனால் அவளோ எழும்பி நின்று அப்பா அந்த மனிதன் சரியாய் தான் கூறுகிறார் என்று கூறினார்.
23. இப்பொழுதோ அவள் திருமணமாகி அந்த சிறு பெண் தன் புருஷனோடு சேர்ந்து வெளியே போய் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறாள். ரோசெல்லா ஒரு மிஷனரி சேவையாளாய் இருக்கிறாள். ஒவ்வொரு சிறைச்சாலை ஆராதணையிலும் அவள் போகக்கூடிய எல்லா காரியங்களிலும் சென்று குடிகாரர்களிடத்தில் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது என்றும் அதில் கிறிஸ்துவுக்குள்ளாய் இருக்கிறது என்றும் கூறுகிறார்.
24. அவளுடைய தகப்பனுக்காக அவள் அதிக பாரம் கொண்டு இருந்தாள். நேற்று முந்தைய நாள் ஒரு தனிப்பட்ட ஒரு பத்து நிமிட பேட்டியில் அவள் கூறினாள். கடந்த நான்கு அல்லது ஐந்து வருடங்கள் கூட்டங்களுக்கு ஒரு நிச்சயமான ஆதரவாளராக இருந்தாள். ஒரு சிறிய பத்து நிமிட தனிப்பட்ட பேட்டியில், அவள் சொன்னாள், “சகோதரர் பிரன்ஹாம் நீர் என்ன செய்தாலும் சரி என்னுடைய தகப்பன் நிமித்தமாக நான் மிகுந்த பாரம் கொண்டுள்ளேன். அவர் உம்மை நேசிக்கிறார் ஆனால் கிறிஸ்துவண்டை வர மறுக்கிறார்” என்றாள்.
25. நான் சொன்னேன், “ரோசெல்லா அதை எப்படி செய்ய வேண்டும் என்று தேவனுக்கு தெரியும். அதை எப்படி செய்ய வைக்க வேண்டும் என்று தேவனுக்கு தெரியும்” என்றேன்.
26. இப்பொழுது, செய்தி வந்திருக்கிறது அவர் ஒரு வண்டி நிறையுள்ள சுண்ணாம்பு கற்களுக்கு அடியில் புதைக்கப்பட்டு இருக்கிறார் என்று. அவருக்காக நாம் ஜெபம் செய்வோம்.
27. கர்த்தாவே அவர் அங்கே அடியில் சிக்கிக் கொண்டிருக்கிறார், அவர் அங்கே அடியிலேயே மரித்துப் போகலாம், அந்த விசுவாசமுள்ள குமாரத்தியின் வேண்டுதலின்படி, தேவனே அவர் மரிக்க மாட்டார் என்று அருளும். அவருடைய ஆத்துமா மேல் நோக்கி பார்த்து மீனின் வயிற்றுக்குள் அல்லது ஜுவாலித்து எரியும் அக்னி சூளைக்குள் அல்லது சிங்கங்களின் கேபிக்குளிருந்து ஜெபித்த ஜெபத்திற்கு நீர் பதில் அளித்தது போன்று சுண்ணாம்பு கற்களுக்கு அடியில் இருந்து வரும் ஜெபத்திற்கு பதில் அளிக்கக் கூடிய தேவன் நீர் என்பதை அவர் நினைவு கூரும்படி செய்யும், நீர் மாறாமல் அதே விதமாக இருக்கிறீர், அவரை ஒரு கழுவப்பட்ட கிறிஸ்தவனாக கொண்டு வரும் கர்த்தாவே; உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று நாங்கள் அறிந்திருக்கிறோம், இதை நாங்கள் உம்மிடத்தில் ஒப்படைக்கையில் இது அவைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், இயேசுவின் நாமத்தில், ஆமென்.
28. இன்றிரவு வார்த்தையை வாசிப்பதில் கர்த்தருக்கு சித்தமானால் இரண்டு இராஜாக்களின் புத்தகத்தில் ஒரு பொருளை ஒரு சந்தர்ப்பத்தில் இருந்து எடுக்க நான் 2-ம் அதிகாரத்தை வாசிக்க விரும்புகிறேன். 2 இராஜாக்கள்: 2:1,6
கர்த்தர் எலியாவைச் சுழல் காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிற போது, எலியா, எலிசாவோடே கூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப் போனான்.
எலியா, எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல் மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
“அப்படியே இருவரும் பெத்தேலுக்கு போனார்கள்.”
அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னை விட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்கு தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோ மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னை விட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனை கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
29. கர்த்தர் தாமே அவருடைய வார்த்தையோடு ஆசீர்வாதத்தை கூட்டுவாராக. இன்றைய இரவிற்கு என்னுடைய பேசும் பொருள் தேவனால் அழைக்கப்பட்ட மனிதன் என்பதாகும். நாம் ஜீவிக்கின்றதான நேரங்களை குறித்து உங்களுக்கு ஒரு சிறு பார்வையை கொடுக்க என்னால் முடிந்த அளவுக்கு சுருக்கமாக இருக்க விரும்புகிறேன் ஏனென்றால் இன்னும் சில நிமிஷங்களில் ஒரு மகத்தான ஜெபவரிசை நமக்கு வரவிருக்கிறது.
30. வானொலியிலும் மற்றும் வித்தியாசமான இடங்களிலும் கனமான உத்தமமான இருதயங்களிலும் இருந்து, “கர்த்தாவே எங்களுடைய நேரத்தில் எங்களுக்கு ஒரு எழுப்புதல் தாரும் என்று குரல்” வருகிறது. உலகத்தை சுற்றிலும் உள்ள கிறிஸ்தவ இடத்திலிருந்து வரும் கடிதங்களில் நாங்கள் அந்த குரலை தான் கேட்கிறோம். அது உங்கள் இருதயத்தில் ஏதோ ஒரு காரியத்தை செய்கிறது. கர்த்தருடைய ஜனங்கள் ஒரு எழுப்புதலை அழைக்கின்றதை கேட்பது அது எழுச்சியாய் இருக்கிறது, அது உங்களை ஊக்குவிக்கிறது அது ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது.
31. மேலும், “என் நாமத்தினாலே அழைக்கப்பட்ட ஜனங்களாக அவர்கள் ஒன்றுகூடி வந்து ஜெபித்தால் அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து அவர்களுக்கு செவி கொடுப்பேன்” என்ற ஒரு வாக்குத்தத்ததை தேவன் செய்திருக்கிறார்.
32. ஆகவே நாம் இன்றிரவு அதை பற்றி சிந்திக்க விரும்புகிறோம். இந்த எல்லாப் பாகுபாடின் மத்தியிலும் எழுப்புதலை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தில் அவருக்கு ஜனங்கள் உண்டாயிருக்கும் வரை தேவன் ஒரு எழுப்புதலை அனுப்ப முடியாது என்பது நினைவு இருக்கட்டும். தேவனால் பயிற்சிக்கப்பட்ட மனிதர்கள் தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்கள் அப்படிப்பட்ட ஜனங்கள் நமக்கு உண்டாகி இருக்கும் வரை நமக்கு ஒரு எழுப்புதல் உண்டாயிருக்க முடியாது. அது ஒன்றும் வேதாகம கல்லூரிகளில், பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. விசுவாசமுள்ள கரடுமுரடானவர்கள் அதாவது தேவனுடைய பள்ளியில் கரடு முரடான பயிற்சியினால் அவரால் கொண்டு வரப்பட்டவர்கள், அக்கினியை சந்திக்க பயப்படாத மனிதர்கள். தேவனுடைய சமுகத்துக்குள்ளாய் வந்தவர்கள். அவருடைய வல்லமையை அறிந்தவர்கள். அவருடைய சர்வ ஞானத்தை அறிந்தவர்கள். அவருடைய சுகமளிக்கும் வல்லமையை அறிந்தவர்கள். ஜீவிக்கின்ற தேவனை அறிந்து கொள்ளும்படியாய் பயிற்சிக்கப்பட்ட சில மனிதர்கள். வார்த்தையினால் அவர்களை பயிற்சிக்கவைப்பது எல்லாம் சரி தான். ஆனால் எழுத்து கொள்ளுகிறது ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
33. இந்த எழுப்புதல் நமக்கு உண்டாயிருப்பதற்கு முன்னதாக தேவன் மனிதர்களை வெளியே அழைத்து பயிற்சிக்க வேண்டும், இந்த செய்தியை கொண்டு செல்ல தேவனால் பயிற்சி அளிக்கப்பட்ட மனிதர்களை அவர் அழைக்க வேண்டும், அவர்கள் எதிர்ப்பு என்ன என்பது குறித்து கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் அக்கினிச் சூளைக்குள்ளாக போக, அல்லது சிங்கங்களின் கேபிக்குள்ளாக, அல்லது அது என்னவாக இருந்தாலும் சரி அதற்கு உள்ளே போக ஆயத்தமாக இருப்பார்கள். அவர்கள் போக தயாராய் இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் தேவனுடைய சமூகத்துக்கு உள்ளாக இருந்து அது அவர் தான் என்று அறிந்து இருக்கிறார்கள். அது ஜெயத்திற்காக இருந்தாலும் அல்லது தோல்விக்காக இருந்தாலும் சரி, அவர்கள் இன்னமும் அதே விதமாய் நிற்கிறார்கள். அந்த விதமான பயிற்சியைத்தான் தேவன் மனிதர்களுக்கு செய்கிறார். தேவன் அதை செய்வார் அதாவது அவருடைய மனிதர்களை அந்தவிதமாக பயிற்சிக்கிறார் என்று நினைக்க அது வினோதமாக இருக்கிறது, ஆனால் அவர் அப்படிச் செய்கிறார்.
உங்களுக்கு தெரியும் நாம் பாடும் ஒரு பழைய பாடல் நமக்கு உள்ளது என்று சிலரை தண்ணீரில் மூலமாயும் சிலரை வெள்ளத்தில் மூலமாயும், சிலரை ஆழ்ந்த சோதனையினாலும் ஆனால் எல்லாரையும் இரத்தத்தின் ஊடாக என்பது;
34. தேவன் அவருடைய பிள்ளைகளை சுத்திகரிக்க அவர்களை சோதனையின் ஊடாக நடத்துகின்றார், சில சமயங்களில் அதை செய்வதற்கு வருடங்களாகிறது என்னை பொறுத்தமட்டில் இன்றிரவு முன்வரிசை சந்திக்கும்படியாய் சரியாக இப்போழுதே தேவன் அப்படிப்பட்ட மனிதர்களை பயிற்சிக்கிறார் என்று நான் நம்புகிறேன். அப்படி அதன் ஊடாக போய்க் கொண்டிருக்கிற மனிதர்களுக்கு நேரமானது அவர்களுடைய பாதத்தை விட்டு உதறி போய்விட்டது. சில நேரங்களில் காரியம் முழுவதுமே விழுந்து கொண்டிருக்கிறது போன்று காணப்படும், ஆனால் அப்படி இருந்தாலும் அவை எல்லாவற்றின் மத்தியிலும் தேவனை ஜீவித்துக் கொண்டு அவர்களுடைய முகங்களை முன்தள்ளி தொடர்ந்து போய்க்கொண்டே இருக்க அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
35. அநேக ஜனங்கள் எழும்புவதற்காக ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களே சில சமயங்களில் ஜெபிக்கிறார்களா என்று வியக்கின்றேன். அப்படியாய் ஜெபிக்கின்றவர்கள் அவர்களுடைய சொந்த ஜெபங்களே ஆசீர்வாதங்களின் கிணறுகளை நிறுத்தி விடுமோ என்று நினைக்கின்றேன். அப்பொழுது அவர்கள் கோழைத்தனமாய் தேவனை நம்புவதற்கு பயப்படுகிறார்கள். அவருடைய வார்த்தையின் பெயரில் அவரை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறார்கள், அவர் இன்றைக்கும் ஜீவித்து கொண்டிருக்கிறார் என்று விசுவாசிக்க பயப்படுகிறார்கள், அவர்களுடைய வேதமோ: “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று தெளிவாக கூறுகிறது.
36. சாமர்த்தியம் உள்ளவர்களை கல்வி கற்றவர்களை புத்தி கூர்மையானவர்களை தேவன் அழைப்பதில்லை அபூர்வமாக இருக்கலாம்-! அவர்களுடைய பங்கை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் மகத்தான மனிதர்கள் ஆனால் வழக்கமாக தேவன் வேலையை முடிக்க விரும்பும் போது (அவர் ஏபிசியை) தெரிந்திருப்பது கூட கடினமாக உள்ள யாரோ ஒருவரை அவர் உபயோகிப்பார். வேத வார்த்தைகளை ஆராய்ந்து பாருங்கள் சரித்திரங்களின் ஊடாக நோக்கி பாருங்கள். தேவனோடு கூட ஏதோ சம்பந்தப்பட்டவர்களாய் இருந்தவர்கள் மகத்தான கல்வி பெற்றவர்கள் அல்ல, ஆனால் கல்வி இல்லாதவர்களும் தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற வாஞ்சையை மட்டுமே இருதயத்தில் உடையவர்களாய் இருப்பார்கள். அவருக்கு உழவர்கள், மேய்ப்பர்கள், மீன்பிடிப்பவர்கள், வேட்டைக்காரர்கள், இயற்கையில் ஜீவிப்பவர்கள் இருந்தார்கள். அந்த இயற்கையின் அசைவற்றதும் அமைதியானதுமான சூழ்நிலையில் ஜீவித்தவர்கள். அங்கே தேவனால் அவர்களிடத்தில் பேச முடியும், அப்படிபட்டவர்களை தான் தேவன் அழைத்தார்.
37. ஒரு மகத்தான புத்தி கூர்மையான ஒருவரை அவர் அழைக்கும் போது அவர்கள் அதைக் கண்டு கொண்டால் அந்த மனிதன் முடிவிலே அவருடைய புத்தி சாதுரியமான கருத்துக்களுக்கு திரும்பிப் போய் விடுகிறான், கொஞ்சம் கழித்து அந்த ஆச்சரியமானதில் கிரியையில் கொண்டு வரும் போது அப்படிப்பட்டதை ஏற்றுக் கொள்ளும்படியாக அவன் உலகத்தின் ஜனங்களோடு அதிகமாக கலப்பாகி விடுகிறான். ஆகையினால் முடிவிலே ஒரு ஸ்தாபனத்திற்கு பலனாகி போய் அப்படியே போய் ஒரு போதகனாகி விடுகிறான். அதெல்லாம் சரிதான் அதைச் செய்யக் கூடிய அந்த நபருக்கு எதிராக எனக்கு ஒரு காரியமும் இல்லை.
38. ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட ஆதிக்கத்திலே ஏதாவது காரியத்தை செய்வதற்கு தேவன் ஆயத்தப்படும் போது அவர் வழக்கமாக அவருடைய நம்பிக்கையை உள்ளே வைக்கக்கூடிய ஒரு மனிதனை அவர் வழக்கமாக எடுத்து அவனை அபிஷேகித்து அவனை வெளியே அனுப்புகிறார். அவன் தன்னுடைய வேலையில் பயமற்றவனாக இருக்கிறான். அந்த விதமான மனிதர்கள் தான் இன்றைக்கு நமக்கு தேவையாயிருக்கிறது மெருகேற்றபட்ட பண்டிதர்கள் அல்ல, ஆனால் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் தேவனை அறிந்த மனிதர்களே நமக்கு தேவை.
39. உதாரணமாக மோசே என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் அங்கே வேதாகமத்தில் இருந்தான், அவன் எல்லா பயிற்சியும் பெற்றிருந்தான். மத சாஸ்திரத்தை பற்றின யாவற்றையும் அவன் அறிந்திருந்தான். அவன் அறிந்திருக்க வேண்டிய அத்தனையும் அறிந்திருந்தான். அப்படி அவனுக்கு ஏதாவது கல்வி தேவையாக இருந்திருக்குமானால் அவனால் இஸ்ரவேலின், அல்லது எகிப்தின் ஆசான்களுக்கும் அவனால் போதிக்க முடியும். அவனுக்கு ஒரு காரியமும் இல்லாமல் இல்லை. அவன் எகிப்தின் சகல ஞானத்திலும் கற்றறிந்தவனாய் இருந்தான் என்று வேதம் கூறுகின்றது. ஏன் அவர்களுடைய பண்டிதர்களுக்கே அவன் போதிக்க கூடியவனாக இருந்தான், அவன் காரியங்களை அவர்களுடைய விஞ்ஞானிகளுக்கு கொடுக்கக் கூடியவராக இருந்தான். புத்தி கூர்மையின் போது அதனை சந்திக்கும் ஆற்றலை உடையவனாக இருந்தான், ஆனால் அப்படி இருந்தும் அவை எல்லாவற்றையும் அங்கே வனாந்திரத்தின் மணலில் அவனுக்குள்ளிருந்து வெளியே எடுக்க தேவனுக்கு நாற்பது வருடங்களானது. அவனுடைய எல்லா புத்தி கூர்மையான தேவனைப் பற்றின கருத்துக்களை எல்லாம் அந்த மனதில் வெளியே எடுக்கும் பொழுது திரும்பவுமாக பாதிக்கப்பட்ட உலகமானது ஆயத்தமாக இருக்கிறது.
40. அந்த விதமாக தான் தேவன் அவருடைய மனிதர்களை எடுத்து அவர்களுடைய பயங்கள் அவருடைய புத்தி நுட்பமான காரியங்கள் யாவற்றையும் வெளியே எடுத்து, அதன் பிறகு மகத்தான குயவனானவர் அவர்களை சக்கரத்தில் இட்டு மறுபடியுமாய் அவர்களை வார்ப்பிக்க தொடங்குகிறார். வேலையாட்கள் தகுதியானவர்கள் அது தேவனுடைய மனிதனாய் இருக்கிறது தேவன் தாமே ஒரு மனிதனை பயிற்சிப்பதற்கு மேலாக யாரால் ஒரு மனிதனை பயிற்சிக்கக்கூடும், அவர்களை அவர் பயிற்சிக்கும் விதத்தை கவனியுங்கள்.
41. தாவீது என்னும் பேர் கொண்ட இன்னொருவரைக் குறித்து நாம் மீண்டும் சிந்திப்போம். தாவீது ஒரு சிறு பையனாய் இருந்த போதிலிருந்தே தேவன் அவனை பயிற்சித்தார். தீர்க்கதரிசியாகிய சாமுவேல் வந்து அவனுடைய தலையின் மேல் எண்ணெய் ஊற்றி அவனை அபிஷேகித்தான் ஏனென்றால் தாவீதை ஒரு மகத்தான போர் வீரனாய் ஆக்கும்படி தேவன் அவனை பயிற்சிக்க போவதாக இருந்தது. அவர் அவனுக்கு கொடுத்த பயிற்சியை நோக்கி பாருங்கள்.
42. சில நாட்களுக்கு முன்னர் நான் கிரின்ஸ்வில் என்ற இடத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன், வழக்கமாக ஜெபிப்பதற்காக நான் அங்கே போவேன். தேவன் அங்கே தாவீதினிடத்தில் நான் உன்னை ஆட்டு மந்தையை விட்டு எடுத்து, வெளியிலே உன் தகப்பனுடைய சில ஆடுகளில் பின்னே இருந்து எடுத்து, பூமியில் இருக்கிற பெரியவர்களின் நாமத்துக்கு ஒத்த நாமத்தை நான் உனக்கு உண்டாக்கினேன் என்று கூறினார்.
43. அவர், தாவீதுக்கு கொடுத்த கரடுமுரடான பயிற்சியை நான் சிந்தித்து பார்க்கிறேன். அவர் ஏதோ பள்ளியில் அவனுக்கு அவ்வளவு பயிற்சி அளிக்கவில்லை ஆனால் அவருடைய சொந்த பள்ளியில் அவனைப் பயில்வித்தார், தாவீது ஒரு வேட்டைக்காரனும் ஒரு மேய்ப்பனுமாய் இருந்தான், அவன் சங்கீதங்களில், புல்லுள்ள இடங்களையும் அமர்ந்த தண்ணீரையும் பற்றி எழுதியுள்ளான். ஏனென்றால், அங்கே அவன் தனிமையில் அவன் மட்டுமாகத்தான் இருந்தான் அவன் உலகத்தின் காரியங்களோடு கெட்டுப் போகாமல் இருந்தான்.
44. ஒரு மனிதனை உலகத்தின் காரியங்களிலிருந்து தூர கொண்டு போக வேண்டியதாக இருந்தது அப்பொழுது தான் அவரால் அவனை அமைதியாய் பிடிக்க முடியும் அப்பொழுது தான் அவனால் அந்த சிறிய மெல்லிய சத்தத்திற்கு தேவனுக்கு கொடுக்க முடியும். பின்னர் தேவனோடு ஒரு முறை தொடர்பு கொண்ட மாத்திரத்தில் இருந்து அவன் பயம் அற்றவனாக ஆகிவிடுகிறான். கவனியுங்கள் மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை குறித்து அவனுக்கு கவலையே இல்லை. அவன் தேவனுடைய சமூகத்தில் இருந்திருக்கிறான். தேவனை அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையில் அவன் அறிந்திருக்கிறான்.
45. அதன் பிறகு தாவீதை நாம் இப்படியாய் காண்கிறோம் ஒரு நாள் ஒரு கரடி உள்ளே வந்து அவனுடைய ஆடுகளில் ஒன்றைக் கொண்டு போகும் படியாய் அனுமதித்தார். தாவீது அப்படியே அந்த கரடியை பின் தொடர்ந்து சென்றான். அவன் ஜெபித்தது போன்று தான் என்பதில் சந்தேகம் இல்லை, ஏன்னென்றால் கொஞ்சம் கழித்து அவன் அதன் பெயரில் அறிக்கை செய்தான். அவன் ஜெபம் செய்து தேவனிடத்தில் கேட்டான்; அந்த ஆட்டின் மேல், அவன் பாதுகாவலனாக இருந்தான். அவனால் அந்த ஆட்டை இழக்க முடியாது. எந்தக் கிரயமானாலும் அவன் அந்த ஆட்டை மீட்க வேண்டும். அவனுடைய சிறிய கவனை கரத்தில் எடுத்துக் கொண்டு அந்த கரடியை தொடர்ந்து போய் அதை கொன்றான். அவன் அந்த ஆட்டை மீட்டாக வேண்டும். அவனை எதற்காக பயிற்சிக்கிறார் என்று நீங்கள் பார்த்தீர்களா-? மேய்ப்பனை யார் எப்படி அழைத்தாலும் அக்கறையில்லை அவன் எதன் ஊடாக எல்லாம் போக வேண்டுமானாலும் அக்கறையில்லை,
46. அவருடைய மேய்ப்பர்கள் ஆடுகளை இரட்சிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
47. பின்னர் இந்த கரடியின் மேல் தாவீது வீரமாய் இருந்ததை தேவன் கண்டார், ஆகையினால் அவர் மிருகத்தின் வல்லமையை சற்று அதிகமாக்கி அவர் ஒரு சிங்கத்தை உள்ளே அனுப்பி ஆடுகளில் ஒன்றை கொண்டு போகும்படியாய் செய்தார்.
48. சிங்கமானது ஒரு கொடுமையான மிருகம், ஓ ஆப்பிரிக்காவில் நான் அவைகளை வேட்டை ஆடினேன் நீங்கள் ஜாக்-ராபின்சன் என்று கூறுவதற்குள் ஒரு சிங்கத்தால் பத்து மனிதர்களை கொன்று போட முடியும். ஓ வல்லமையுள்ளது, மகத்தான மிருகம். வெறுமென அதனுடைய கர்ஜனையினால் மனிதர்களை அப்படியே முடித்து விடும். ஒரு சிங்கத்தின் வல்லமையின் கீழ் மரிக்க எந்த ஒரு மனிதனுக்கும் புண்பட்ட என்ற உணர்வே இருக்காது. அது கர்ஜனையை முழக்கும் போது அதை கேட்பது என்பது அவ்வளவு பயங்கரமானது. அதனுடைய மகத்தான பயங்கரமான பாதங்கள் அவ்வளவு தான் ஒரு நொடியில் ஒரு டஜன் ஆட்களை கிழித்துப் போடும்.
49. ஒரு சிறு பையன் என்ற முறையில் சிந்தித்து பார்த்தால் அவன் சிவந்த மேனியாய் இருந்தான் என்று வேதம் கூறுகின்றது. அது என்னவென்றால் அவன் மிகவும் சிறியவனான பையனாக இருந்தான். கரத்திலே ஒரு சிறிய கவனை வைத்திருந்தான் அது என்னவென்று உங்களுக்கு தெரியும். அதாவது ஒரு சிறு தோளில் அதன் இரண்டு பக்கங்களிலும் கயிற்றை கட்டி வைத்திருப்பார்கள். ஒரு பசியாய்யுள்ள சிங்கம் ஏற்கனவே அதன் வாய்யில் இரத்த ருசி கொண்டிருக்கிறது. மந்தைக்குள் ஓடி ஒரு ஆட்டை பிடித்து விட்டது. தாவீது தேவனை நோக்கி பார்த்து அந்த ஒரு ஆட்டை என்னால் இழக்க முடியாது, கர்த்தாவே; எனக்கு நீர் உதவி செய்யும் என்றான். அவன் அந்த கவனை கொண்டு அந்த சிங்கத்தை அடித்து வீழ்த்தினான். அந்த சிங்கம் மீண்டுமாய் அவனை எதிர்த்து எழுப்பின போது அதற்கு சுமார் 500 பவுண்டு எடை இருக்கும் அல்லது அதிகமாகவே இருக்கும் இவனோ ஒரு 70 அல்லது 80 பவுண்ட் எடையுள்ள ஒரு சிறிய பையனாக இருந்தான். அவனுடைய சிறு அரைக்கச்சையில் இருந்து கத்தியை உருவினான் சிங்கம் எழுப்பின போது ஒரு சில அடிகளை கொடுத்து அதனால் பத்து பேர்களை கொன்று போட முடியும். அவன் அந்த சிங்கத்தின் தாடியை பற்றி பிடித்து அதை கொன்று போட்டான்.
50. தைரியம்; தேவனுக்கு கோழைகள் தேவையில்லை. அவருடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளவும் அவரை விசுவாசிக்கும் நீங்கள் பயப்படுவீர்களானால், அவரால் உங்களை உபயோகப்படுத்த முடியாது. கர்த்தர் சொல்வதற்கு மட்டும் செவி கொடுத்து, வேறு ஒரு காரியத்திற்கும் கவனம் செலுத்தாத வீரமான மனிதர்கள் அவருக்கு தேவை. அந்த விதமானவர்களோடு தான் அவர் இடைப்படுகிறார். சபை என்ன கூறினாலும், போதகர் என்ன கூறினாலும், சபையான எதற்காக நின்றாலும் கவலைப்படாமல், தேவனுக்காகவும் நீதிக்காகவும், அவருடைய வார்த்தைக்காகவும் அவன் நிற்பான். அவனுடைய ஜனங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறதான அவருடைய எழுப்புதலுக்காக, தேவன் அப்படிப்பட்டதான மனிதர்களைத் தான் அனுப்புவார்.
51. பின்னால் வந்த வருஷங்களில் போர்க்களத்தில் அவருடைய சகோதர்களை அவன் சந்திக்கச் சென்ற போது அங்கே ஒரு பெரிய மகத்தான 14 அங்குல நீள விரல்களை கொண்ட ஒரு இராட்சதன் இருந்தான், அவன் இப்பொழுது யாராவது வந்து என்னோடு சண்டையிடட்டும் உங்களால் என்னை ஜெயிக்க முடிந்தால் நான் சரணடைகிறேன், நாங்கள் உங்களை சேவிப்போம் அது போன்று உங்களுக்கும். யார் சரணடைந்தாலும் நிச்சயமாக அவன் தோற்று போனவனாவான் என்று பெருமையாய் பேசினான்.
52. அந்த விதமாக செய்வதைத்தான் பிசாசு விரும்புவான். நீங்கள் நன்றாக அவனிடத்தில் சிக்கிக் கொண்ட நேரத்தில் அவன் உன்னுடைய ஜம்பம் ஒன்று சாயாது. உன்னால் தெய்வீகசுகத்தை குறித்து மெத்தடிஸ்ட் சபையில், பாப்டிஸ்ட் சபையில் பிரசங்கிக்க முடியாது என்று கூறுவான். மெத்தடிஸ்ட் போதகர்களே ஒரு முறை தேவனை இருகப்பற்றி பிடித்துக் கொண்டு உங்களால் முடியுமா அல்லது முடியாதா என்று கண்டறியுங்கள். ம், கும், அவர்கள் போதிக்கின்ற உங்களுடைய வேதசாஸ்திரத்தை கொண்டு உங்களால் ஒரு போதும் அதை செய்ய முடியாது. நீங்கள் தேவனை இருகப் பற்றி பிடித்து அது அவர் தான் என்பதை அறிய வேண்டும்.
53. பெந்தகோஸ்தே ஜனங்களென்று அவர்கள் கூறுகிறார்கள். சில வருஷங்களுக்கு முன்னர் ஒரு கூட்ட ஜனங்கள் மூலையில் நின்று கொண்டிருப்பார்கள் உள்ளே போகும் படியாக அவர்களுக்கு ஒரு கட்டிடமும் கிடையாது, ஆனால் நீங்கள் லைப் பத்திரிகையில் அவர்களை குறித்து அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை அன்றோரு நாள் வாசித்தீர்களா-? இந்த காலவிரிவுரையை கண்டிராத மகத்தான அதிசயங்களில் அது ஒன்று; அதாவது எழும்பி வருகின்ற பெந்தகோஸ்தே சபையென்றிருந்தது.
நிச்சயமாக மற்ற எல்லா சபைகளையும் ஒன்றாக கூட்டி கணக்கெடுத்தால் ஒரு வருடத்தில் அதிகமான மன மாற்றங்களை உண்டு பண்ணுகிறவர்கள் இவர்கள் தான். அவர்கள் சில காரியங்களில் குழம்பி இருக்கலாம். ஆனால் சகோதரனே அவர்கள் வீரமுள்ளவர்கள். அவர்கள் அங்கே பாதத்துக்கு பாதமாய் நின்று கொண்டு கருமையை கருமை என்றும் வெண்மையை வெண்மை என்றும் கூறுகிறார்கள். எழுப்புதல் முடிவிலே உண்டானதும் அது அவர்கள் மத்தியிலே உண்டாகும் அவ்விதமாய் இல்லையா என்பதை கவனித்து கண்டறியுங்கள். இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் சரியாகி விடுவார்கள்.
54. சவுல் அவனுடைய போர்க் கவசத்தை தாவீதுக்கு அணிவித்து தாவீதே, “இந்த இராட்சதனோடு நீ போர் செய்யப் போவதாய் இருந்தால்... ஏன்.., நீ ஒரு சிறு பையன். ஒரு வாலிபனெயன்றி வேறொன்றுமில்லை; ஆனால், “அவனோ வாலிப முதல் ஒரு போர் வீரனாக இருந்து வருகிறான். உன்னால் எப்படி அவனிடத்தில் போர் புரிய முடியும்” என்று கூறினான்.
55. இந்த சிறு தாவீது கூறுவதை கேளுங்கள்: பாருங்கள், அவன் இந்தவிதமாய் கூறவில்லை. மாண்புமிகு சவுலையா அவர்களே என்னுடைய தகப்பனார் என்னை இலக்கண பள்ளிக்கு உயர்நிலைப் பள்ளிக்கு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினால் நான் ஒரு பி.எச்.டி பட்டம் பெற்றிருக்கிறேன். இதை செய்வதற்கானவைகளை உடையவனாக இருக்கிறேன்: நான் ஒரு சாமர்த்தியம் உள்ள மனிதன் என்று கூறவில்லை; அவன் அதை அவ்விதமாக கூறவில்லை.
56. அவன் சொன்னான், “என் ஆண்டவனே; நான் தூரத்தில் என்னுடைய தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன், ஒரு கரடி உள்ளே புகுந்து ஆடுகளில் ஒன்றை கொண்டு போனது, நான் அதை கொன்று போட்டேன்; ஒரு சிங்கம் உள்ளே புகுந்து ஒன்றை கொண்டு போனது, நான் அதை அடித்து கீழே வீழ்த்தினேன், அது மீண்டுமாய் எழுப்பின போது நான் அதைக் கொன்று போட்டேன்” என்றான். என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த அந்த கர்த்தர்; இந்த பெலிஸ்தருடைய கைக்கும் தப்புவிப்பார் என்று தாவீது கூறினான்: தேவனால் பயிற்சிக்கப்பட்ட ஒரு மனிதன் எந்த மனிதனுக்கும் இருக்கக் கூடிய எப்படி சண்டையிடுவது என்பதை அறிந்திருக்கும்.
57. எல்லா பயிற்சியும் பெற்றவனாய் அங்கே சவுல் நின்று கொண்டிருந்தான். ஒரு பட்டயத்தை குறித்து தாவீதுக்கு ஒன்றுமே தெரியாது, கேடயத்தை குறித்து அவனுக்கு ஒன்றுமே தெரியாது. சவுல் அவனுடைய மகத்தான போர் கவசத்தை தாவீதுக்கு தருப்பித்தான், சிறிய தாவீதோ இவைகளோடு அவனுடைய கால்கள் தொட்டிபோல் வளைந்து போகும் அளவிற்கு நின்று கொண்டிருந்தான். குருமாரின் வஸ்திரங்கள் (அங்கிகள்) ஒரு தேவனுடைய மனிதனுக்குப் பொருந்தாது என்று அவர்கள் கண்டறிந்தார்கள்; அது அப்படியே அவனை கீழாக அழுத்தியது. நம்முடைய எல்லா கோட்பாடுகள் முதலான காரியங்கள் அக்கரையில் இருக்கும் தேவனுடைய கருவிகளோடு ஒருபோதும் பொருந்தாது:
58. ஓ நாம் எப்படியாய் இப்படியே தொடர்ந்து தொடர்ந்து போய் அனேகமானவைகளை அனேக வித்தியாசமானவைகளை கூறிக்கொண்டே போகலாம், ஆனால் நாம் நேராக நம்முடைய பேசும் பொருளுக்கு திரும்புவோம்.
59. எலியாவுக்கு வயதாகிக் கொண்டே போனது, அவன் இனி அதிக காலம் ஜீவிக்க போவதில்லை என்றும், அவன் இந்த உலகத்தை விட்டு சீக்கிரத்தில் போக போகிறான் என்றும், அவன் அறிந்திருந்தான். தேவன் ஒரு மனிதனை கண்டுபிடித்து வைத்திருக்கிறார் அவன் ஒரு உண்மையான மனிதன், அவன் ஒரு நல்ல மனிதன் அவனுடைய பெயர் எலிசா.
60. இப்பொழுது நீங்கள் கவனித்து பார்த்தால் ஒருவனுடைய பெயர் எலியாவாக இருக்கிறது இன்னொருவருடைய பெயர் எலிசாவாக இருக்கிறது, இப்பொழுது எலியா நேராக எந்த அமைப்புகள் முதலானவற்றுக்குளும் போகவில்லை அந்த நாட்களில் இருந்ததான அந்த மகத்தான பள்ளிகளிடத்தில் போகவில்லை. அவன் மதசாஸ்திர பள்ளிகளில் இருந்த எந்த காரியத்துக்கும் போகவில்லை. அவன் என்ன செய்தான். எலியா நேராக வயல்வெளிக்கு சென்று 12 எருதுகள் பூட்டி உழுது கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டான். என்ன-! உழுது கொண்டிருந்தவனான எலிசாவுக்கு ஒரு நேரான வரிசையை எப்படியாய் கவனித்து செய்ய வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் மட்டும் திரும்பிப் பின்னிட்டு பார்த்திருந்தால், பாதையை விட்டு இப்படியும் அப்படியுமாக அசைந்து போய்விடும் என்பதை எலிசா அறிந்திருந்தான். ஒரு நேரான உழவுக்காளையைக் கொண்டு உழ தெரிந்த ஒரு மனிதனுக்கு உழவுகாலின்மேல் கரத்தை வைத்த பின்னர் பின்னிட்டு திரும்பி பார்க்கக் கூடாது என்று தெரியும் என்பதை தேவன் அறிந்திருந்தார். அவனுடைய படிப்பை அவன் முடிக்கும் மட்டுமாய் காத்திருக்கவில்லை ஆவியிலே அவனை பற்றினான். அப்படியே அவன் ஒரு மாட்டை கொன்று ஒரு பலியை செலுத்தி அந்த சால்வையை அவன் மேல் விழுந்த மாத்திரத்தில் அவன் எலியாவோடு புறப்பட்டுப் போய் விட்டார். அவன் ஆயத்தமாய் இருந்தான், அவன் சித்தமாய் இருந்தான், அவனை வல்லவனாக்க கூடும் என்று தேவன் அறிந்திருந்தார்.
61. தேவன் அவனுக்கு எதாவது பயிற்சி கொடுத்தாக வேண்டும். 12 ஏர் மாடுகளை உழவுகாலில் கட்டி அவைகளை கொண்டு ஒரே மனிதன் உழும்போது எப்படியாய் அவருடைய கண்களை அந்த உழவுகாலின் மேல் கவனமாக இருக்க வேண்டும் என்ற பயிற்சி அவனுக்கு கொடுத்து இருந்தார். அவனுக்கு கொஞ்சம் பொறுமையை கற்றுக் கொடுத்தார். எப்படி பொறுமையாய் இருப்பது என்றும், அந்த எருதுகளை ஒரே நேர் வரிசையில் நடக்கவும் பயிற்றுவித்தார்.
62. அதன்பிறகு அவர் சில ஆட்களை பயிற்சிக்க வேண்டியதாயிருந்தது. அவர்களை வேதத்தின் மேல் வார்த்தையின் மேல் தேவனோடு இசைவாய் நேரான வரிசையில் அப்படியே இருக்கும் படியாய் பயிற்சிக்க வேண்டும்.
63. அப்படியானால் தேவன் உன் கூட அவனுக்கு கொஞ்சம் கற்பிக்க வேண்டி இருந்தது. நீ இங்கேயே இரு நான் கில்கால் மட்டும் போகிறேன் கர்த்தர் என்னை அழைத்திருக்கிறார் என்று கூறினான்.
64. தீர்க்கதரிசியானவன் அந்த வல்லமையும் அந்த எலியாவின் சால்வையும் அவன் மேல் இருக்க உணர்ந்த பின்னர், நான் உம்மை விடுகிறது இல்லையென்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு செல்கிறேன் என்று கூறினான்.
65. அப்படியே கில்காலுக்கு சென்றனர். அது கிறிஸ்தவ அறிக்கை ஞானஸ்தானம் இவைகளின் ஸ்தலமாய் இருக்கிறது. பின்னர் அவன் இங்கேயே இப்பொழுது இரு இது போதுமானது. நீங்கள் ஞானஸ்தானமும் அறிக்கையும் செய்து விட்டீர்கள் இது போதுமானது. நான் பெத்தேல் மட்டுமாய் சென்று வருகிறேன் என்றான். அதற்கு, “தேவனுடைய வீடு என்று” அர்த்தமாம்.
66. இப்பொழுது அது சொல்லிக் கொடுக்கின்ற அநேகருக்கு அது எல்லாம் சரியாய் தான் இருக்கும். ஓ நான் இப்பொழுது தான் சபைக்குள்ளாக வந்து ஐக்கியப்படுகிறேன். ஏன் அங்கேயே தரித்திருக்க கூடாது-?
67. ஆனால் கவனியுங்கள் எலிசாவினால் அந்த விதமாய் நினைத்துக்கொள்ள முடியவில்லை. தேவனுடைய வல்லமையை அவன் ஏற்கனவே உணர்ந்து விட்டான். இன்னும் அதிகமாக அவனுக்கு இருக்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன், “நான் உம்மை விடுகிறது இல்லையென்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு செல்கிறேன்” என்று கூறினான். ஓ எப்படியாய் நான் அதை விரும்புகிறேன்.
68. அவன் தேவனுடைய அப்பதின் வீடாகிய பெத்தேலுக்கு சென்றான். அங்கே அவன் ஒரு கூட்ட பண்டிதர்களை கண்டான். அவர்கள் யாவரும் பயிற்சி பெற்ற பிரசங்கிமார்களாய் இருந்தார்கள். அவர்கள் சுற்றி நடந்து அவரிடத்தில் வந்து, ஐயா என்ன என்று உமக்கு தெரியுமா-? நீங்கள் அந்த குச்சியின் சிறிய முனையில் இருக்கிறீர்கள். எலியா உம்மிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட போகிறார் என்பது உமக்கு தெரியுமா-? அவர் மிகவும் வயது சென்றவராய் இருக்கிறார். அவரால் நீண்ட காலம் இனி ஜீவிக்க முடியாது. எலியா எடுத்துக் கொள்ளப்பட போகிறான். நீ அங்கே ஒரு பைத்தியக்காரனை போன்று நின்று கொண்டு இருக்கப்போகிறீர்.
69. நான் உங்களுக்கு ஒரு காரியத்தை இப்பொழுது கூறட்டும். தேவனை அப்பொழுதாவது ஒருவன் ருசித்திருப்பானேயானால் அவனால், ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டியில் இருந்து அவனுடைய தாகத்தை தீர்த்துக் கொள்ளவே முடியாது, அல்லது தீர்த்துக் கொள்ள சித்தமாக இருக்க மாட்டான். ஆம். ஆனால் அதைச் செய்ய முடியாது. அவர்கள் அங்கேயுள்ள தீர்க்கதரிசிகளின் பள்ளியில் பெற்ற அவர்களுடைய மத சாஸ்திரம் தேவனுடைய மனிதனின், அதாவது தேவனை ஏற்கனவே ருசித்தவனின் தாகத்தை அங்கே தீர்க்காது.
70. அவர்கள் தொடர்ந்து அதை விளக்கி. ஓ, நீர் இங்கே தான் இருக்க வேண்டும். ஏன் ஆறு வாரங்களில் நாங்கள் உமக்கு ஒரு பிஎச்டி பட்டம் கொடுத்து விடுவோம். நங்கள் உமக்கு ஒரு பயிற்சியைக் கொடுத்து உமக்கு பிரசங்கிக்க உனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து அனுப்புவதற்கு சுமார் நாலு வருஷமாகும் என்று உங்களுக்கே தெரியும். நீங்கள் அந்த தகுதியை பெற்று விட்டீர்களென்றால், நாங்கள் உம்மை எங்களுடைய ஸ்தாபனத்திற்கு வெளிய அனுப்புவோம் என்று நம்ப செய்வார்கள். ஒரு தேவனுடைய மனிதனை அது ஒரு போதும் திருப்திப்படுத்தாது. நீர் மட்டும் ஒரு நாலு அல்லது ஐந்து வருடங்கள் எங்களோடு தரித்திருந்தால், உம்மை ஒரு போதகராயிருக்க நாங்கள் உமக்கு பயிற்சி அளிப்போம்.
71. அந்த விதமான காரியத்துக்கு அவனுக்கு நேரமில்லை. அவன் ஊற்றிர்க்கு போகும் பாதையில் போய்க் கொண்டிருக்கிறான். அதற்கும் மேலாக அவன் வந்து விட்டான. பரலோகத்தின் ருசியை அவனுடைய ஆத்துமாவில் ஏற்கனவே அவன் ருசித்திருக்கிறான்.
72. அதற்கு அவர், “உன்னுடைய தலைமையான அவர் எடுத்துக்கொள்ளப்பட போகிறார் என்று உனக்கு தெரியுமா என்று” கேட்டார்?
73. அவன் என்ன கூறினான் என்பதை கவனியுங்கள், “ஆம் நான் அதை அறிவேன்; ஆனால் நீர் பேசாமல் அமைதியாய் இரும்” என்றான். வேறு வார்த்தையில் கூறினால், “உன் உயிரை காப்பாற்றிக் கொள், அதை குறித்து எனக்கு கூற முயற்சிக்காதே. நான் என்ன செய்யப் போகிறேன் என்று என்னிடத்தில் கூற முயற்சிக்காதே; நான் எங்கே போகிறேன் என்று எனக்கு தெரியும்” என்றான்.
74. தேவனே அதைப்போன்ற மனிதர்களை எங்களுக்கு தாரும். இதன் பேரில் இப்படி அப்படி அசைவதும் அதன் பேரில் இப்படி அப்படி அசைவதுமாய் இராத தேவனால் பயிற்சிவிக்கப் பட்ட மனிதர்களை தாரும்.
75. நான் எங்கே போகிறேன் என்று எனக்கு தெரியும்; அது குறித்து என்னிடம் பேச வேண்டாம். அமைதியாய் இரும். என்னை அதைரியப்படுத்த முயற்சிக்காதே ஏனென்றால் அது எந்த நன்மையும் செய்ய போவதில்லை.
76. ஒரு ஜெபம் ஏறெடுக்கப்பட்ட ஜனங்களுக்கு மட்டும் அந்த அளவு தைரியம் இருக்குமானால் நலமாயிருக்கும்.
77. “ஓ அற்புதங்களின் நாட்கள் கடந்து போயிற்று; அது உண்மையானதல்ல நீங்கள் கவனியுங்கள் நீங்கள் மீண்டும் வியாதியாவீர்கள்.”
78. நீங்கள் “பேசாமல் அமைதியாக இருங்கள் அதைக்கு றித்து ஒன்றும் என்னிடத்தில் கூற வேண்டாம்; நான் போய்க் கொண்டே இருக்கிறேன். எழுப்புதல் வந்துக் கொண்டிருக்கிறது தேவன் அதை வாக்களித்திருக்கிறார்.” ஓ, தேவனுடைய குமாரர்களாகிய உங்களைத் தான். அக்கறையின் ஆதிக்கத்திற்குள்ளாக பயமின்றி பிரவேசியுங்கள். அச்சமின்றி பிரவேசியுங்கள். தேவனே அவருடைய வார்த்தையில் எடுங்கள்;
79. “அவர் எடுத்துக்கொள்ளப்பட போகிறார் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் அக்கறை கொள்வது அதுவல்ல என்னுடைய கவனத்தை இழுக்கத்தக்கதாக. இங்கே உங்களிடத்தில் ஒன்றுமே இல்லை. உங்களுடைய பட்டங்கள் எல்லாம் உங்களுடைய பிஹச்டி பிஏ இந்த எல்லா காரியங்களும் என்னை திருப்திபடுத்துவதில்லை. பேசாமல் அமைதியாய் இருங்கள். நீர் அங்கே எங்கேயோ வெடிக்கப்போகிறீர்” என்றான்.
80. “சரி, அப்படி நான் வெடித்தால் வெடித்து போகட்டும்; நான் என் பாதையில் இருக்கிறேன்” என்று கூறி அவன் போய்க்கொன்டே இருந்தான். உன்னால் அதை கடந்து போக முடியாது.
81. “என்னால் அதை கடந்து போக முடியாது என்று எனக்கு தெரியும் ஆனால் தேவன் கடந்து கொண்டு போக பண்ணுவார் என்று” கூறினான். சரி, “எலிசா யோர்தானுக்கு போகிறான்; நானும் அவனோடு கூட போகிறேன்.” ஒவ்வொரு ஜீவியத்திலும் தேவனுக்கு யோர்தான் தேவையாயிருக்கிறது.
82. எனவே எலிசா சுற்றி வந்தான். எலியா எலிசாவினிடத்தில் நீ ஒரு வாலிப மனிதன் என்றான். ஒருக்கால் இந்தவிதமாக உண்மையிலேயே உனக்கு எந்த படிப்பும் இருந்ததில்லை என்று கூறியிருக்கலாம். அந்த வயதான தீர்க்கதரிசி அவனை பரீட்சித்து பார்க்க முயன்று கொண்டிருந்தான். அவன் நீ ஒரு வாலிப மனிதன் உனக்கோ அதிகப்படியான பள்ளி பயிற்சி கிடையாது. சொல்லப்போனால் உனக்கு ஒரு இலக்கண பள்ளி படிப்பு கூட கிடையாது. உனக்கு செய்ய தெரிந்ததெல்லாம் எப்படி உழ வேண்டும் என்பது தான். எனவே நீ இங்கு தங்கியிருந்து உன்னுடைய பிஏ பட்டத்தைப் பெற்றுக்கொள் என்று இதே போன்று கூறியிருக்கலாம் புரிகின்றதா-? நீ இங்கேயே தங்கி இருந்து உன்னுடைய பட்டத்தைப் பெற்றுக் கொள்.
83. ஆனால் எலிசாவிடம் அல்ல. ஒரு முறை தேவனை தொட்டவனும் அவன் மேல் அபிஷேகத்தின் வல்லமையை உணர்ந்தவனுமான அந்த மனிதனிடம் அல்ல. அவன் சொன்னான், “நான் உம்மை விடுகிறது இல்லையென்று கர்த்தருடைய ஜீவனை கொண்டும் உம்முடைய ஜீவனை கொண்டும் செல்கிறேன்” என்று கூறினான். அவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அவன் தரிசனத்தை கண்டான். என்ன சம்பவிக்க போகிறது என்று அவன் அறிந்திருந்தான். அவர்கள் இருவருமாக யோர்தானுக்கு சென்றார்கள். யோர்தான் என்றால் மரணம் என்று அர்த்தம். வயதான மனிதனும் வாலிபமானா மனிதனுமாய் அங்கே அவர்கள் நின்றார்கள். அது உண்மையாகவே கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் பிரதிநிதித்துவுமாய் இருக்கிறது.
84. அங்கே யோர்தான் அண்டையில் அவர்கள் இருவரும் நின்றார்கள். யூதேயாவின் குன்றுகளில் இருந்து மகத்தான பாறைகளில் இருந்து வெளியே ஓடி கர்ஜனையை போன்று அவர் அதோ வந்து கொண்டிருக்கிறார். நரைத்த தலைமயிர் அவருடைய முதுகின் மேல் தொங்கிக் கொண்டிருக்க மங்கிய கண்கள் யோர்தானின் ஊடாக பார்த்துக்கொண்டிருக்க எலியா அங்கே இருந்தான். அவனுடைய ஒவ்வொரு அசைவையும் இந்த வாலிபன் கவனித்துக் கொண்டிருந்தான். ஒருவன் வாலிப மனிதன் தேவனுடைய சித்தத்தை நடப்பிக்கும்படியாக ஒரு தரிசனத்திற்காக காத்து கொண்டிருக்கிறான். இன்னொருவனோ வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். அவர்கள் இருவரும் யோர்தான் அண்டையில் இருந்தார்கள். எலிசாவை பொருத்த மட்டில் எலியா வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.
85. எலியா ஒரு கசப்பான ஜீவியத்தை உடையவனாக இருந்தான். அந்தப் பெண் பிரசங்கியாகிய யேசபேலும் ஆகாபும் அவனுடைய பாதையை மிகவும் கரடு முரடாக்கினார்கள். அவன் கடந்து வந்த கற்களும் அதன் ஊடாக போக வேண்டியதாயிருந்த எல்லா காரியங்களையும் எலியா களைத்து போய் கொண்டு இருந்தான். ஒரு நல்ல போராட்டத்தை போராடி ஓட்டத்தை முடித்ததை அவன் அறிந்திருந்தான். யோர்தானின் அக்கரையில் அவனுடைய ஓய்வு இருந்தது. ஆனால் எலிசாவோ, எலியாவின் மேலிருந்த அந்த ஆவியையே கவனித்துக் கொண்டிருந்தான்.
86. எனவே நீங்கள் கவனித்து பார்த்தால் ஒவ்வொரு விசுவாசியும் நீங்கள் விட்டு போட வேண்டும் என்ற கட்டத்திற்கு வரும்போது யோர்தானின் குளிர்ந்த தண்ணீர் உங்களுடைய பாதங்களில் படுவதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் கடந்து போக போகின்றீர்களா அல்லது இல்லையா-? யோர்தான் என்பது பிரிந்து போகிறதாய் இருக்கிறது. பிரிதலாய் இருக்கிறது.
87. அங்கே பின்னால் குன்றின் மேல் நின்று கொண்டிருந்த பிரசங்கிமார்கள் இன்னமும் எலிசாவை பார்த்து... பார்த்தேன்... நீ பின்தொடர்ந்து போகாமல் இருப்பது நலம். நீயும் போய் விடுவாய் என்று சத்தமிட்டார்கள். இன்றைக்கும் அதேவிதமான குறிப்பு தான் வருகின்றது என்பதை நீங்கள் கேட்கிறீர்களா-?
88. ஆனால் எலிசாவோ தேவன், தேவனாய் இருந்து அது அவருடைய தீர்க்கதரிசியானால் நான் அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நான் செய்வதற்கு எனக்கு அவருடைய ஆவி தேவையாய் இருக்கிறது. எனக்கு அவனுடைய பள்ளிக்கூடம் தேவை இல்லை. அவர்களுடைய பள்ளி அதை செய்து இருக்குமானால் அவர்கள் அவருடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அதைச் செய்யும்படியாய் தேவன் என்னை அழைத்திருக்கிறார். அவருடைய ஆவி எனக்கு தேவையாயிருக்கிறது.
89. சபைகளின் பள்ளிக்கூடங்கள் அந்த ஸ்தானத்தையும் இயேசுவானவர் அளித்த வல்லமையையும் எடுத்துக்கொண்டிருந்தால் வருஷங்களுக்கு முன்னரே அதை அவர்கள் எடுத்திருக்க வேண்டும். மெதோடிஸ்ட் பாப்டிஸ்ட் கத்தோலிக்க பிரஸ்பிடெரியன் ஆனால் அதனால் அதைச் செய்ய முடியாது.
90. அதற்கு இயேசு கிறிஸ்துவின் ஆவி தேவையாயிருக்கிறது. எல்லா ஸ்தாபனங்களின் மற்ற எல்லா காரியங்களின் பின்னால் இருக்கின்ற யோர்தானை நீங்கள் கடந்து தனிமையாய் தேவனோடு நிற்க வேண்டும்.
91. எனவே தேவன் யோர்தானிலே அவனோடு நின்றார். எலியா மேல் நோக்கி பார்த்துக் கொண்டே, அங்கே எங்கோ அக்கரையில் தேவன் அவனை சந்திப்பார் என்பதை அறிந்தவனாய் இருந்தான். அவனுடைய சால்வையை அவன் கழற்றி சுற்றும் முற்றும் அந்த வாலிபனை பார்த்து யோர்தானை அடித்தான். அவன் அப்படி செய்த போது யோர்தான் பிளந்தது. அவர்கள் உலர்ந்த தரையில் கடந்து சென்றார்கள்.
92. பாருங்கள். யோர்தானில் ஒரு வழியை உண்டு பண்ண உங்களிடத்தில் ஏதோ காரியத்தை வைத்துக் கொண்டிருக்க யோர்தான் ஒன்றும் அவ்வளவு மோசமானது அல்ல.
93. ஓ, அவர்கள் அக்கறையை சேர்ந்த போது. அங்கிருந்த ஒவ்வொரு புதரிலும் ஒரு குதிரையும் ஒரு ரதமும் பூட்டப்பட்டிருந்தது. எலியாவை வீட்டிற்கு கொண்டுவர ராஜாக்களின் ராஜாவானவர் ஒரு வழி தூணியை அனுப்பி இருந்தார். எலியாவை பொருத்தமட்டில் அது எல்லாம் முடிந்து விட்டது. சுமார் என்பது வருடகாலமாக அவன் அதில் போதுமானதாய் பெற்றிருந்தான். அங்கே ஜனங்களோடு சந்தடி செய்துக் கொண்டு தொல்லைகள் முதலானவைகளின் ஊடாக சென்றிருந்தான். அவன் போவதற்கு ஆயத்தமாக இருந்தான். அவன் சுற்றிமுற்றி எலிசாவை பார்த்தான்.
94. எலிசாவோ ஒரு தரிசனத்தை காண விரும்பினான். எல்லா பள்ளிப்படிப்பும் அவனுக்கு இருந்தது. அவன் அங்கேயே இருந்துவிட்டு இருக்கலாம். அவர்களோ எதையும் நோக்கினவர்களாக இல்லை. தேவனோ அவருடைய சொந்த வழியில் அவனை பயிற்சிக்கு போகிறார். ஆக அவன் அப்படியே சுற்றி பார்த்த போது அந்த புதர்கள் எல்லாம் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகள் பூட்டப்பட்ட இரதங்கள் இருக்க கண்டான். அது எலிசாவிற்கு ஏதோ காரியத்தை செய்தது. அவன் ஒரு தரிசனம் கண்டான். ஆம் சகோதரனே-!
95. தேவன் எலியாவை உயரக் கொண்டு போன போது எலியாவின் ஆவியை இரண்டு மடங்காக பெற்றவனாக எலிசா திரும்பி வந்தான். அவன் எழுப்புதலுக்கு அப்பொழுது ஆயத்தமாய் இருந்தான்.
96. அதற்கு முன்னர் வயலை உழும் ஒரு பையனாகயிருந்த அந்த மனிதனை அப்பொழுது கவனியுங்கள். தேவன் அவனுடைய பெயரை அழிவில்லாதது ஆக்கினார். எல்லா தீர்க்க தரிசிகளும் சுற்றி நின்று கொண்டு அவனை கவனித்துக் கொண்டு அவனுக்கு தலை வணங்க வேண்டி இருந்தது ஏனென்றால் தேவனுடைய வல்லமையை அவன் தன் மேல் உடையவனாக இருந்தான்.
97. யோர்தானுக்கு ஊடாக சென்று உலகத்தின் காரியங்களிலிருந்து தங்களை வேறு பிரித்துக்கொண்ட ஆண்கள் பெண்களுடைய பாதங்களுக்கு தேவன் இந்த உலகத்தை தலை வணங்க செய்யபோகிற வேலை வந்துக் கொண்டு இருக்கின்றது. சகோதரனே சகோதரியே இன்றிரவு நீங்கள் என்ன செய்தாலும் நீங்கள் என்ன நினைத்தாலும் தேவனுடையவர்களாய் நீங்கள் யோர்தானைக் கடந்து போங்கள். தொடர்ந்து போய் வேறு பிரிந்து உலகத்தை பின்னால் விட்டுவிடுங்கள். தேவனுடைய சேவைக்காக அவர் தாமே உங்களை பயிற்சிவிப்பாராக. இந்த எழுப்புதலுக்கு முந்தினதான ஒரு நாளில் நாம் ஜீவித்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் தேவனோ தேடிக் கொண்டும் இருதயங்களை கண்டுபிடிக்க முயன்று கொண்டும் இருக்கிறார்.
98. கவனியுங்கள் பவுல் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதனை ஒரு பரிசேயனை அவர் கண்டு பிடித்தார். அவன் ஒரு சிஷனைப்போன்று ஆவதற்கு முன்னர் அவனை அவர் தயார் செய்ய வேண்டியதாயிருந்தது. காலங்களின் ஊடாக அவர் மனிதனுக்கு என்ன செய்தார் என்று பாருங்கள். அவர்களைக் கொண்டு போய் அவர்களுக்கு உள்ளிருந்த மத சாஸ்திரத்தை அழித்து வெளியே எடுக்க வேண்டியதாய் இருந்தது. பவுல் தரிசனத்தை கண்ட மாத்திரத்தில் அவன் நேராக எருசலேமிற்கு போகவில்லை. அவனுக்கு போதித்ததான அந்த நாளின் இஸ்ரேலின் மகத்தான போதகனுமான கமாலியேல் இடத்திற்கு போகவில்லை. ஆலோசனைக்காக அவன் திரும்பி அவனிடத்தில் போகவில்லை. ஏன் அதற்குப் பின்னர் 14 வருஷங்களுக்கு அவன் எருசலேமுக்கு போனதேயில்லை. ஆனால் ஒரு ஜெபக்கூட்டத்தில் அவன் எகிப்திற்கு போயிருந்தான். அங்கே அநேக புதிய ஏற்பாட்டின் புத்தகங்களை அவன் எழுதும்படியாய் தேவன் செய்தார். புரிகின்றதா-? தேவன் மனிதர்களை தேடிக் கொண்டு இருக்கிறார். யாரையாவது கொண்டு அவர் அதை எழுதவேண்டும் என்றிருந்தார். எனவே அவர் பவுலை தெரிந்துகொண்டார். அவனுக்குள் இருந்த மதசாஸ்திரம் அனைத்தையும் அவர் வெளியே எடுத்து போட்டார். கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்காக அவன் அறிந்த அத்தனையும் அவன் மறக்க வேண்டி இருந்தது என்று பவுல் கூறுகிறான்.
99. தேவன் இன்று உலகத்தை நமக்குள்ளாக இருந்து வெளியே எடுக்கவும் நம்மை எடுத்து நம்மை நாமே வெறுமையாக்கவும். பயமற்ற ஆண்களும் பெண்களுமாக இருந்து தேவனை நேசித்து தேவனோடு தரித்திருந்து வேறுபிரிதலின் கோடாகிய யோர்தானைக் கடந்து, அவருடைய மகிமைக்காக அவர் நம்மை எடுத்து உபயோகிக்கதக்கதாய் நாம் இருக்க தேவன் இன்றைக்கு முயற்சிக்கிறார். இந்த வேளையில் தான் நீங்கள் கடினமாக சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
100. நீங்கள் இந்த ஸ்தலத்தை கடந்ததேயில்லை என்றால். இந்த கோட்டின் ஊடாக நீங்கள் வந்ததே இல்லை என்றால். நீங்கள் இன்னமும் சரி என்னுடைய தாயார் ஒரு குறிப்பிட்ட சபையை சேர்ந்தவள் என்று கூறுவீர்களானால். அதெல்லாம் சரி தான். ஆனால் அது உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. புரிகின்றதா-?
101. போர்முனைக்கு புருஷர்களையும் ஸ்திரிகளையும் இன்றைக்கு தேவன் அழைக்கிறார். அவர்களை அவர் கில்காளுக்கு அழைக்கவில்லை, எரிகோவிற்கும் பெத்தேலுக்கும் அவர் அழைக்கவில்லை. அவர்கள் அழிந்து போவார்கள். ஆனால் அவர்களை யோர்தானைக் கடக்கும்படியாய் அவர் அழைக்கிறார். அதனால் அவர் உன்னை வெளியே கொண்டுவந்து அவருடைய சொந்த வல்லமையின் பள்ளிக்குள் கொண்டு சென்று உங்களை ஆக்கவும் உருவாக்கவும் முடியும்.
102. இப்பொழுது அவர் என்ன செய்கிறார் என்று கவனியுங்கள், அவருடைய குமாரனின் ஆவியை அவர் இங்கே கீழே அனுப்புகிறார். கடந்த 2000 வருஷங்களில் இந்த உலகம் கண்டிராத அடையாளங்களையும் அற்புதங்களையும் அவர் நடப்பித்து கொண்டிருக்கிறார். விஞ்ஞான உலகமானது அதை புகைப்படம் எடுத்து விட்டது. அக்கினி ஸ்தம்பம் கர்த்தருடைய தூதன்.., இதை படமெடுத்துவிட்டது. இன்றைக்கு அது பக்தி சம்பந்தமான ஓவிய கலைக் கூடத்தில் இதுவரை புகைபடமாய் எடுக்கப்பட்ட ஒரே இயற்கைக்கு மேம்பட்டதாக வாஷிங்டன் டிசி யில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவருடைய அதே அடையாளங்களையும் அற்புதங்களையும் அவர் எடுத்து அளித்துக் கொண்டிருக்கிறார்.
103. அது என்னவாய் இருக்கிறது-? அது யோர்தானை கடப்பதாகும். தேவனோடு தனித்திருங்கள். அவருடைய சொந்த சுத்திகரிப்பின் சூளையில் அமர்ந்திருக்க வேண்டும். அந்த மகத்தான முதன்மையான தேவனுடைய சக்கரத்தின் மேல் ஏறு அவர் உன்னை வனையட்டும். இன்றைக்கு நாம் ஜெபத்தில் இருக்கையில் அந்த ஸ்தலத்திற்கு நாம் வந்து கொண்டிருக்கையில் அவருடைய சக்கரத்தின் மேல் உங்களை வைத்து இதோ இருக்கிறேன் கர்த்தாவே உம்முடைய சொந்த சித்தம் போல் என்னை வனைந்து உருவாக்கும் என்று கூறுங்கள். தேவன் அதை செய்வார்.
104. ஜெபத்திற்காக நாம் ஒரு நிமிடம் தலைவணங்கி இருக்கையில் உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற ஜனகளிடத்தில் ஜெபத்திற்கு முன்னதாக இந்த கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். இன்றிரவு எத்தனை பேர்கள், இயேசுவோடுகூட யோர்தானுக்கு சென்று அங்கிருந்து ஒரு தரிசனத்தை காண கூடிய மட்டும் போய், தேவன் என்றால் உண்மையிலேயே என்னவென்று அறிந்துகொள்ள உத்தமமாக இருக்க விரும்புகிறீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சற்று நோக்குங்கள். சுமார் 200 கரங்கள் இக்கட்டிடத்தில் உயர்த்தப்பட்டிருக்கிறது. நேராக யோர்தானுக்கு போங்கள். குருமார்கள் பள்ளிகளுக்கல்ல. எலிசா சரியாக அதின் பக்கமாக சென்றான். அவர்களோ, “இங்கேயிரு” என்றார்கள்.
105. அவனோ, “எனக்கு தேவையில்லை. அது மனிதனினால் ஆனது என்று” கூறினான். தேவனை பற்றின தாகமுடைய ஒரு மனிதனுடைய தாகத்தை அது ஒருபோதும் தணிக்காது. எந்த குருமார் பள்ளி அனுபவமும் எந்த கடைப்பட்ட முதலானவைகள் ஒரு போதும் அந்த தாகத்தை தணிக்காது. ஜீவ தண்ணீர் ஊற்றிலிருந்து நீங்கள் குடிக்கும் மட்டாக தணிக்காது. கரத்தை உயர்தினவர்கள் இப்பொழுது என்னோடு கூட ஜெபியுங்கள்.
106. அன்புள்ள தேவனே, இந்த சில நிமிஷ ஆராதனையில் உஷ்ணத்தில் மதிலை சுற்றி நின்று கொண்டிருக்கின்ற ஆண்களும் ஸ்திரிகளும் பையன்களும் பெண்களும் வெளியே ஜன்னல்களின் மேல் சாய்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இருந்தாலும் அங்கே அவர்களுக்கு உள்ளாக ஏதோ காரியம் இருக்கிறது. அதாவது அவருடைய கவனத்தை நீர் பற்றிக் கொண்டீர், இல்லை என்றால் அவர்கள் கடந்து போய் இருப்பார்கள். அந்த விதமாக அவர்கள் நின்றிருக்க மாட்டார்கள்.
107. ஆனால் தேவனாகிய கர்த்தாவே, அவர்கள் மானிடர்கள் என்று அறிந்து இருக்கின்ற காரணத்தால். எங்களுடைய மாண்புமிகு மேயர்களில் ஒருவர் துணை ஜனாதிபதி பேச கேட்டுக் கொண்டிருந்து அப்படியே மரித்துப் போய் விட்டார் என்று தினசரி பத்திரிக்கையில் வாசித்தோம். இன்னொருவர் பந்து விளையாட்டின் போது அன்றொரு இரவு நன்றாய் அறியப்பட்ட ஒரு மனிதன் மரித்து போய்விட்டார். அவர்களுடைய ஆத்துமா எங்கேயோ இருக்கிறது. தேவனே என்றோ ஒரு நாள் அது எங்களுடைய வழியாய் இருக்கும். ஒருவேளை அதே மாதிரியாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் போயாக வேண்டும்.
108. மனிதர்கள் தாமே தங்களுடைய நிலைக்கு வந்து வெறுமென சபையை சார்ந்திருப்பது அது உங்களுடைய தேவை அல்ல என்ற உணர்வுக்குள்ளாக வரட்டும். ஆவியினால் நிறைத்தவனும், பிறந்தவனும் செதுக்கி எடுக்கப்பட்டவனும், பரிசுத்த ஆவியினால் தகனிக்கப்பட்டவனும், அடையாளம் போடப்பட்டவனும், கோட்டை தாண்டினவனுமான தேவனால் அழைக்கப்பட்ட மனிதர் உமக்கு தேவையாயிருக்கிறது. பில்லி கிரஹாமும் இன்னும் மற்றவர்களும் ஜெபித்துக் கொண்டிருக்கிறதுமான எழுப்புதலை, நீர் அனுப்ப போகிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அப்பொழுது அவர்களுக்குள்ளாக இருக்கின்ற அவர்களுடைய மத சாஸ்திரத்தில் இருந்து விலகி நிற்கிறவர்களும், அவர்களுடைய சொந்த வழிகளிலிருந்து விலகிநிற்கிறவர்களும், பயமற்றவர்களுமானவர்களும் நல குண இலச்சனை-களையுடையவர்களும் உம்மை விசுவாசிக்கிறவர்களும் உம்முடைய வார்த்தையின்படியாய் உம்மை எடுத்துக்கொள்ளுகிறதுமானவர்களை உம்மால் எடுக்க முடியும்.
109. தேவனே தங்களுக்குள்ள எல்லாவற்றையும் தேவனுக்கு கொடுக்க கூடியவர்களும். உலகத்திற்கு அவைகளை விற்று போடக்கூடியவர்களுமானவர்கள் அநேகர் இப்பொழுது இங்கே பிரசன்னமாகி இருப்பார்களாக. அறிக்கையிடுகிற ஸ்தலமும், கிறிஸ்தவ தாகமுமான கில்காலை கடந்து போகக் கூடியவர்களுமானவர்கள் உமக்கு தேவையாயிருக்கிறார்கள். அவர்களுடைய மத சாஸ்திரத்துடன் அமர்ந்திருக்கும் அவருடைய தீர்க்கதரிசிகளின் பள்ளியை கடந்து போகக் கூடியவர்கள் உமக்கு தேவையாயிருக்கிறது. யோர்தானுக்கு ஒரு திறந்து தரிசனத்திற்கு சென்று கடக்கும் போது ஜீவிக்கின்ற தேவனை இன்னமும் ஜீவிக்கின்றவராய் கண்டார்கள்.
110. பின்னர் இந்த தீர்க்கதரிசியானவன் அவனை சுற்றிலும் அக்கினிமயமான தூதர்களும் ரதங்களும் தோத்தானிலே ஒரு நாளாக இருக்க கண்டதாக நான் பார்க்கிறோம்.
111. அவர்கள் இன்னமும் இங்கே இன்றிரவு இருக்கிறார்கள் கர்த்தாவே. உம்முடைய புருஷர்களை அழையும் உம்முடைய ஸ்திரிகளை அழையும் உம்முடைய பையன்களை அழையும். உம்முடைய பெண்களை அழையும் கர்த்தாவே. அவர்களுடைய இருதயங்களுக்கு சமாதானத்தை பேசுவீராக. உலகத்தின் காரியங்களுக்கு அப்பால் அவர்கள் கடந்து போவார்களாக. ஏனென்றால் இயேசுவின் நாமத்தில் அவர்களுக்காக நாங்கள் கேட்கிறோம் ஆமென்.
112. நான் சிறிது நேரம் உண்மையாக அமைதியாக ஆராதனையில் சிறிது நேரம் பாட விரும்புகிறேன்.
உம்முடைய சொந்த வழியாக இருப்பதாக 
கர்த்தாவே உம்முடைய சொந்த வழியாக இருப்பதாக.
என்னை முழுவதுமாக உம்முடைய 
அதிகாரத்திற்குள்ளாக வைத்துக் கொள்ளும். 
ஒப்புக்கொடுத்தவனாய் அமைதியாய் 
காத்துக் கொண்டிருக்கையில் 
என்னை உருவாக்கி உம்முடைய 
சித்தத்தின்படியாய் என்னை ஆக்கும்.
113. நாம் எல்லாருமாக ஒன்று சேர்ந்து ஆராதிக்கும் விதமாய் மாறுவோமாக. மெதுவாக இப்பொழுது ஆராதனையில் சுற்றும் முற்றும் பார்க்காதீர்கள், தேவனை நோக்கி பாருங்கள். மிகவும் நன்மையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
உம்முடைய சொந்த வழியாக இருப்பதாக 
கர்த்தாவே உம்முடைய சொந்த வழியாக இருப்பதாக.
என்னை முழுவதுமாக உம்முடைய 
அதிகாரத்திற்குள்ளாக வைத்துக் கொள்ளும். 
ஒப்புக்கொடுத்தவனாய் அமைதியாய் 
காத்துக் கொண்டிருக்கையில் 
என்னை உருவாக்கி உம்முடைய 
சித்தத்தின்படியாய் என்னை ஆக்கும்.
114. நீங்கள் ஆராதிக்க விரும்புகிறீர்களா-? செய்தி இப்பொழுது முடிந்து விட்டது ஒரு நிமிடம் நம்முடைய தலைகளைத் தாழ்த்தி ஆராதனையில் அந்த பாடலைப் பாடுவோம் அதன் அர்த்தத்தை உங்கள் இருதயத்தில் உணர்ந்து பாருங்கள்,
115. கர்த்தாவே இதை அறியும் தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் இந்த சிறிய பிள்ளைகள் துவங்கி வயதான புருஷர்கள் ஸ்திரீகள் மட்டுமாக பரிசுத்த ஆவியானவர் தாமே அவருடைய விசுவாசத்தின் மேல் கிரியை செய்து அவர்களுடைய எல்லா சந்தேகங்களையும் அவர்களுடைய எல்லா தோல்விகளையும் நீக்கி போட்டு உம்முடைய சித்தத்தின்படியாய் அவர்கள் வார்ப்பிக்கப்படுவார்கள். அவர்கள் உம்முடைய உருவாக்கும் சக்கரத்தின் மேல் இருக்கையிலே நாங்கள் எங்களுடைய ஆத்துமாக்களை அர்ப்பணிக்கும் படியாய் வைக்கிறோம். மறுபடியுமாய் வாழ்த்துகிறோம். இதை அறியும் ஓ தேவனே உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில். ஆமென்.
116. நான் இதை எப்படியாய் நேசிக்கிறேன். உங்களுக்கு அப்படி இல்லையா. அமைதியாக பரிசுத்தாவியை உணருங்கள். ஓ கரடுமுரடான செய்திக்குப் பின்னர் பரிசுத்த ஆவியான அந்த இனிமை அது வார்த்தையினால் வந்தது. அதிலொரு சரணத்தை நான் பாடப் போகிறேன்.
அல்லது முயற்சிக்க போகிறேன்.
இப்பொழுது எல்லாருமாக சேர்ந்து பாடுவோம்.
117. அவர்கள் என்னவாய் இருந்தார்கள் தேவன் பயிற்சித்ததும் அழைத்ததுமான மனிதர்கள். தேவன் தம்முடைய வார்த்தையை அதற்குள்ளாக போடும் படியாக அவரால் எப்படி ஒரு கோழையை எடுத்து உபயோகிக்க முடியும். அவன் ஒரு பயந்தவன். அக்காரணத்திலால்தான் அவர்கள் அது குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறார்கள். தேவன் பரிசுத்தாவியை கொண்டு விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள். பயந்தாங்கொலி மனிதர்கள் அல்ல. தேவன் உள்ளாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார். அவன் துரிதமாக அவருடைய ரத்தத்தை எப்படி முத்தரிப்பான். அவனுடைய சாட்சியை இரத்தத்தோடு முத்தரிப்பான். கவலைப்பட மாட்டான். அவன் ஜீவிக்கிறது கிறிஸ்துவாய் இருக்கிறது. கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் அந்த விதமாகத்தான் அவர்கள் உணருகிறார்கள்.
118. இப்பொழுது ஜெப வரிசைக்கான நேரம். இது முன்னதாகவே துவங்குகிற ஜெபவரிசையாய் இருக்கிறது. மணி எட்டு இருபது தான் ஆகிறது. ஆனால் நாம் ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டுமென்று இருக்கிறோம். நீங்கள் இதை அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவன் தாமே பேசின ஒரு வார்த்தையோடு நம்மால் செய்யக்கூடிய எல்லா பிரசங்கத்தையும் நாம் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது.
119. இப்பொழுது ஜெபவரிசையை துவங்க இதை நாம் எல்லாருக்கும் ஜெபம் செய்வோம் என்று வாக்களித்து இருக்கிறோம் தேவனுக்கு சித்தமானால் அதை நாம் செய்வோம். ஒவ்வொரு இரவும் நாம் ஜெப அட்டைகளை கொடுத்தோம். ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு கூட்டத்தை வகையறுதலுக்காக அழைப்போம் என்று கூறியிருந்தோம். ஆனால் ஜனங்கள் அப்பொழுது சில பேர் அந்த இரவிலே போய் விடுவார்கள். நமக்கு ஒரு மகத்தான கூட்டம் உண்டாயிருக்கும் ஆவியானவர் ஊற்றப்படுவார் ஜனங்கள் போய் விடுவார்கள். அடுத்த நாள் இரவுக்கு நாம் இன்னும் அதிகமான ஜெப அட்டைகளை கொடுக்க வேண்டியிருக்கும்.
120. நான் சரியாய் தான் கூறுவேன் என்று நினைக்கிறேன். நான் நோக்கி பார்க்கிறது அங்கே பின்னாடி நின்று கொண்டிருப்பது ஃபென்னி வில்சன் அல்ல என்று நினைக்கிறேன். எனக்கு நினைவு இருக்கிறது நான் அந்த ஸ்திரியை சுமார் 17 வருடங்களுக்கு முன்னர். ஓ அதை காட்டிலும் அதிகமாக, சுமார் 1932-ல் காச நோயில் மரித்துக்கொண்டிருந்தாள், இந்தப் பட்டணத்தின் வைத்தியர்கள் ஒன்று முடியாது என்று கைவிட்டனர். அவளுக்கு ரத்தப் பெருக்கு கண்டு அவளுடைய போர்வை முதலானவைகள்யாவும் ரத்தத்தால் தோய்ந்து இருந்தது. அவளுடைய புருஷனும் மகளும் வந்து என்னை காலையில் கண்டார்கள். நான் அங்கே போய் அவள் மேல் கர்த்தராகிய இயேசுவின் பெயரை கூறி அழைத்தேன். சில நாட்களுக்கு பின்னர் ஒரு குளுமையான குளிர்காலத்தில் நான் அவளுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்தானம் கொடுத்தேன். அவள் அப்படியே வீதியின் ஒரு பழைய கால்நடை வாகனத்தின் பின்னால் அவ்வளவு ஈரத்தோடு சென்றார். அவள் ஜீவிக்கிறாள் இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கிறாள், காரணம் கிறிஸ்துவானவர் அதைச் செய்தார் அனேக வருஷங்களுக்கு பிறகு அவளை முதன்முதலாய் சந்திக்கிறேன். கூட்டத்தில் இருக்கிறவர்களை சுற்றிப் பார்த்து அதை காண்கிறேன்.
121. தேவன் இன்னமும் ஜீவிக்கிறார். அது சரியே. “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்களென்று என்று” அவர் கூறினார்;
122. இது என்னவென்று நான் ஒருவிதமாய் உங்களுக்கு பொருத்தி காட்ட விரும்புகிறேன் ஏனென்றால் நான் அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் ஒருக்கால் போய் எனக்கு அது புரியவில்லை என்று கூறுவீர்கள்.
123. இப்பொழுது என்னுடைய வாதம் இதுதான் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் அப்படியே மாறாதவராக இருக்கிறார். இப்பொழுது அவர் அப்படி மாறாதவராய் இருப்பாரானால், ஒவ்வொரு அடிப்படை கொள்கைகளிலும் அவர் மாறாதவராகவே இருக்க வேண்டும். வல்லமையில் மாறாதவராக இருக்க வேண்டும் வரத்தில் மாறாதவராக இருக்க வேண்டும் எல்லா காரியங்களிலும் முன்னிருந்தது போன்று மாறாதவராய் இருக்க வேண்டும்.
124. இங்கே அவர் இந்த பூமியின் மேல் இருந்த போது ஒரு சமயம் சில கிரேக்கர்கள் அங்கே வந்து, “ஐயன்மீர் நாங்கள் இயேசுவை காண வேண்டும்” என்றனர்.
125. இயேசுவைப் பற்றி எப்பொழுதாவது கேள்விப்பட்ட ஒவ்வொரு ஸ்திரி புருஷருடைய வாஞ்சையும் அதுவாகவே அவரை காண வேண்டும் என்பதாகவே இருக்கும். அவர் அப்படி மாறாதவராய் இல்லை என்றால் அப்பொழுது நம்மால் அவரை காண முடியாது, ஆனால் அப்படி அவர் மாறாதவராய் இருந்தால் நம்மால் அவரை காண முடியும் அல்லது அவர் ஏதோ காரியத்தை தவறாக கூறி இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் காலத்திலோ உலகம் என்னை காணாது நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான், ‘நான்’ என்பது ஒரு தனிப்பிரதி பெயராகும். நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். அப்படியானால் இயேசுவானவர் அவருடைய சபைக்குள் இருந்து அவர் செய்த அதே காரியங்களை, உலகத்தின் முடிவுபரியந்தம் செய்து கொண்டு இருப்பேன் என்று அவர் வாக்களித்திருக்கிறார். இப்பொழுது அவர் இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னை காணாது சரி அப்படியானால் நாம் எப்படி அவரை காண போகிறோம்-? நாம் அவருடைய ஆவியை பார்த்தாக வேண்டும், அவர் நமக்குளாக இருந்தால் அந்த ஆவியானது அவர் அப்பொழுது செய்த அதே காரியத்தை செய்ய வேண்டும், அப்படி இல்லை என்றால் அது அதே ஆவியாய் இருக்க முடியாது.
126. நானே திராட்சச்செடி நீங்கள் கொடிகள், கொடியானது திராட்சை செடியில் இருக்குமாயின் செடியானது அதற்கு கொடுக்கின்ற விதமான கனிகளை அது கொடுக்கும். கனி அந்த திராட்சை செடியில் இருந்து வெளி வந்த முதலாவது கோடி பெந்தேகோஸ்தே கோடியாக இருந்தால், தரிசனங்கள், வல்லமைகள், சுகமளிப்பவர்கள், பரிசுத்தாவியின் அபிஷேகம் மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் இருக்கும், அடுத்த கொடியானது அதே விதமான கோடியாக இருக்கும். அப்படியே தொடர்ந்து கடைசி மட்டுமாக அதே விதமாகவே இருந்தாக வேண்டும், அதை தான் இயேசு சொன்னார்.
127. இப்பொழுது நேற்றைய தினம் அவர் என்னவாக இருந்தார் என்று நான் பார்ப்போம். நேற்றைய தினம் அவர் என்னவாக இருந்தார் என்று நம்மால் கண்டு பிடிக்க முடிந்தால், இப்பொழுது நான் ஒரு குறுக்கு வழி எடுக்கின்றேன், நேரத்தின் காரணமாக ஒரு நிமிட உபதேசத்தை கொடுக்கப்போகிறேன், நேற்றைய தினம் அவர் என்னவாய் இருந்தார் என்று நம்மால் காண முடிந்தால் அப்பொழுது அவர் இன்றைக்கும் என்றைக்கும் எப்படியாய் இருக்க போகிறார் என்பதை நம்மால் காண முடியும். அது போதுமானதா-?
128. இப்பொழுது அவர் இங்கே பூமியின் மேல் இருந்த போது அவர் மேசியாவாக வந்தார். யோவான்ஸ்நானகனால் ஞானஸ்தானம் பண்ணப்பட்டார். ஒரு கிரியையும் அதுவரைக்கும் செய்யவில்லை. அவருடைய ஆரம்ப ஊழியத்திற்குள் அவர் பிரவேசித்தார், அவர் யாருக்காக அனுப்பப்பட்டார் யூதர்களுக்காக.
129. இப்பொழுது உலகத்தில் மூன்றுவித இனத்தவர்களே  இருந்தார்களென்று நாம் தெளிவாக அறிந்து கொண்டோம். அவை யார் என்றால் யூதர்கள், புறஜாதியார்கள், சமாரியர்கள். அது காம், சேம், யாப்பேத், என்பவர்களுடைய ஜனங்களாய் இருக்கிறார்கள். யூதன் புறஜாதியான் சமாரியன்.
130. உங்களுக்கு நினைவிருக்கின்றதா-? பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு பரலோகத்தின் திறவுகோல்களோடு யூதர்களை அழைத்தான். நீங்கள் ஒவ்வொருவரும் மனம் திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்.
131. பிலிப்பு போய் சமரியாரிடத்தில் பிரசங்கித்தான். அவர்கள் எல்லாரும் விசுவாசித்து மனம் திரும்பி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள். பரிசுத்தாவியானவர் மட்டும் தான் அவர்கள் மேல் வரவில்லை. பேதுருவினிடத்தில் திறவு கோல்கள் இருந்தது. அவன் அங்கு சென்று அவர்கள் மேல் கரங்களை வைத்தான் அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்.
132. பின்னர் புறஜாதியான கொர்நேலியு ஒரு தரிசனத்தை கண்டான். அதாவது அவன் ஆளை அனுப்பி சீமோன் எனைப்பட்ட பேதுருவை அழைக்க வேண்டும். அவன் தோல் பதனிடுகிறவனுடைய வீட்டில் தங்கி இருக்கிறான். பேதுரு அங்கே வந்த போது பேதுரு இந்த வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கையில் பரிசுத்த ஆவியானவர் யாவர் மேலும் இறங்கினார். அப்பொழுது பேதுரு, “நம்மைப் போல பரிசுத்தஆவியை பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விளக்கலாமா” என்று சொன்னான். வெளி வருகின்ற ஒவ்வொரு கொடியும் அதே போன்று தான் இருக்கும். புரிகின்றதா-?
133. இப்பொழுது இயேசு கிறிஸ்துவானவர் புறஜாதியாரிடத்தில் வரவில்லை. எத்தனை பேர்களுக்கு அது தெரியும். எந்த புறஜாதியாரிடத்திற்கும் போகக்கூடாது என்று அவருடைய சீஷர்களுக்கு அவர் கூறியிருந்தார். எத்தனை பேர்களுக்கு அது தெரியும்.
134. “நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்கு போகாமல் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு போங்கள். நீங்கள் போய் தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேலிடத்தில் பிரசங்கியுங்கள்” என்றார். இப்பொழுது அந்த நாளில் அவர் வருவதற்கு யார் காத்திருந்தார். புறஜாதியார்கள் அல்ல. நாம் அஞ்ஞானிகளாய் இருந்தோம். ஆங்கிலோ சாக்சன்களாக இருந்தோம். சூரியன் முதலானவைகளை ஆராதித்து கொண்டிருக்கிற ரோமர்களாய் நாம் இருந்தோம். நாம் எந்த மேசியாவையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் யூதர்களும் சமாரியர்களும் எதிர்நோக்கிக் கொண்டு இருந்தனர். அவருக்காக எதிர்பார்த்து கொண்டிருந்த அந்த ஜனங்களுக்கு அவர் தம்மை எந்தவிதமாய் அறிவித்தார்.
135. நாம் திரும்பி பரிசுத்த யோவான் முதலாம் அதிகாரத்திற்கு போகமாக. ஒரு நிமிடம் பார்ப்போம் கூர்ந்து கவனியுங்கள்.
136. முதன்முதலாக அவரிடத்தில் கொண்டு வந்த யூதன் யார் என்றால், அந்திரேயா மனம் மாறினான் அவன் போய் அவருடைய சகோதரனாகிய சீமோன் பேதுருவைக் கண்டு அந்த சீமோனை இயேசுவுக்கு முன்பாக கொண்டு வந்தான். இயேசுவானவர் அவனுடைய பெயர் என்னவென்றும் அவனுடைய தகப்பனின் பெயர் என்னவென்றும் கூறினார். எத்தனை பேர்களுக்கு அது தெரியும். பின்னாக ராஜ்யத்தின் திறவுகோல்களை வைத்துக்கொள்ள போகின்ற அந்த மனிதனுக்கு அது என்ன செய்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அவர் மேசியா தான் என்று அது தான் அவரை நிரூபித்தது அது தான்.
137. பிலிப்பு மனமாறின உடனே அவன் போய் நாத்தான்வேலுவைக் கண்டான். அது மலையை சுற்றி சுமார் 30 மைல்களுக்கு அப்பால் இருந்தது, அவனுடைய வீட்டிற்கு போய் அவன் இந்தவண்ணமாய் கூறுகின்றதை என்னால் கேட்க முடிகின்றது; ஓ, “திருமதி நாத்தான்வேல், நாத்தான்வேல் எங்கே” என்றான்-?
ஓ, “அவர் அந்த ஒலிவ தோட்டத்திற்குள் இருக்கிறார்” என்றாள்.
138. மிகவும் வேகமாகப் பிலிப்பு அங்கே ஓடிப்போய்; “நாத்தான்வேல் நீ எங்கே இருக்கின்றாய்” என்றான்; அவனை ஒரு மரத்தடியின் கீழ் இருக்க கண்டான்; நாத்தான்வேல் அங்கே ஜெபித்துக் கொண்டிருந்தான்; அவன் ஜெபித்து முடிக்கும் மாட்டாய் அவன் காத்துக்கொண்டிருந்தான் பின்னர், “அவனிடத்தில் எப்படி இருக்கின்றாய் நாத்தான்வேல், உன்னுடைய விளைச்சல் எப்படி இருக்கிறது-?” என்றான். ஓ, அவனிடத்தில் ஒரு செய்தி இருந்தது இயேசுவை சந்தித்த அந்த மனிதரிடத்திலும் அந்த விதமாகத்தான் இருக்கும், புத்தியீனத்திற்கு அவனிடத்தில் நேரமே இருக்காது’ அவன், “வந்து பார் நாங்கள் யாரை கண்டோமென்று யோசேப்பின் குமாரனாகிய நசரேயனாகிய இயேசுவை கண்டோம்” என்றான்.
139. நாத்தான்வேல் ஜெபத்திலிருந்து எழும்பி அவனுடைய உடையைத் கட்டிக் கொண்டிருக்கிறதை என்னால் காண முடிகின்றது. அவன், “இப்போ பிலிப்பே நீ ஒரு நல்ல மனிதன் என்றும், நீ ஒரு உண்மையான மனிதன் என்றும் நான் அறிவேன். நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாக கூடுமோ” என்றான். சரி, “உனக்கே தெரியும் அப்படியே மேசியா வருவாரானால், அவர் சபையின் முலமாக எருசலேமிற்குத் தான் வருவார்” என்றான். அதை தான் ஜனங்கள் இன்று கருதுகிறார்கள். புரிகின்றதா-? அவர் எருசலேமிற்கு வருவார். கடந்த கூட்டத்திலே காய்பா அதை அறிவிக்கவில்லையே. ஆகையினால் இன்று வேத சாஸ்திரியும் அதை அறிவிக்கவில்லையே. ஆக உன்னை ஒரு உம்மை உண்மையுள்ள மனிதன் என்று அறிவேன். காலத்தின் கடைசியிலே நீ தவறி விட்டாய்-? என்றான்.
ஓ, “அப்படி எல்லாம் இல்லை, நீயே வந்து பார்; அறிந்துகொள்” என்றான்.
அதற்கு அவன், “யாதொரு நன்மை உண்டாக கூடுமா” என்றான்.
140. எந்த மனிதனும் கொடுக்கக்கூடிய ஒரு மேலான பதிலை, “நீயாகவே வந்து பார்” என்றான்.
141. இப்பொழுது சுற்றி கொண்டு பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது என்னால் பிலிப்பு கூறுவது அல்லது பிலிப்பு நாத்தான்வேலிடத்தில், “என்னவென்று உனக்கு தெரியுமா-? நீ மீன் வாங்கி காசை கொடுத்துவிட்டு ரசீதை கேட்டதற்கு எனக்கு கையெழுத்து போட தெரியாது என்று கூறினானே அந்த வயதான மீன்காரன் உனக்கு நினைவிருக்கிறதா-?” என்றான்.
அவன், “ஆம்” என்றான், அவனுடைய பெயர் சீமோன் என்று நினைக்கிறன் என்றான்.
“ஆம், அதே தான்” என்றான்.
142. அன்றொருநாள், “நான் அவனை மேசியாவுக்கு முன்பாகக் கொண்டு போனேன். அவனை கண்ட மாத்திரத்தில் அவர் உன்னுடைய பெயர் சீமான் உன் தகப்பனாரின் பெயர் யோனா என்று கூறினார்; எனவே உன்னை அவர் முன்பாக கொண்டு போகும் போது நீ யார் என்பதை அவர் கூறாமல் போனால் அது என்னை ஆச்சரியப்படவே வைக்கும்” என்றான்.
அவன் சொன்னான், “ஆ ஆ, இப்பொழுது ஒரு நிமிஷம் பொறும்; எனக்கல்ல” என்றான்:
143. ஆக அடுத்த நாள் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள்; வழக்கம் போல் இயேசுவானவர் ஜெபவரிசையில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். பிலிப்பு மேலே ஏறி வந்து கூட்டத்தை நோக்கி வந்தான். இயேசு மேல் நோக்கி பிலிப்பு திட்டின் வழியாக ஒரு மனிதனை கூட்டிக்கொண்டு வருவதைக் கண்டார்: அவனை நோக்கி பார்த்து, “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று கூறினார்.
144. அது ஒரு வினோதமான உபதேசமா-? அது நேற்று இயேசுவாய் இருந்தது அவர் மாறாதவரார் இருப்பாரானால் அது இன்று இயேசுவாய் இருக்கவேண்டும்.
145. அந்த மனிதன் அப்படியே நின்றான், என்னால் நாத்தான்வேலை காணமுடிகின்றது பிலிப்பு, “முழங்கையால் அவனை முட்டி நான் உன்னிடத்தில் என்ன சொன்னேன்” என்றான்.
146. அவன், “ரபி” என்றான்; அதற்கு போதகர் அல்லது இன்றைக்கு நாம் எப்படி அழைக்கின்றோமோ அது உங்களுக்கே தெரியுமே: உண்மையிலேயே அதற்கு சரியான வார்த்தை போதகரே என்பது தான்; அதற்கு அவன், “ரபி நீர் எப்போது என்னை அறிவீர்” என்றான்-? “என்னைக் குறித்து எந்த காரியத்தையும் உமக்கு எப்படி தெரியும்-? என்னுடைய ஜீவியத்தில் நான் உம்மைக் கண்டதே இல்லை நான் ஒரு இஸ்ரவேல் என்று உமக்கு எப்படி தெரியும்-? நான் நீதியுள்ளவன், உத்தமன், உண்மையுள்ளவன் என்று உமக்கு எப்படி தெரியும்-? உம்முடைய ஜீவியத்தில் நீர் என்னை கண்டதேயில்லை உமக்கு என்னை எப்படி தெரியும்” என்றான்.
147. அதற்கு அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னர் நீ மரத்தின் கீழ் இருக்கும் போது நான் உன்னை கண்டேன்” என்று சொன்னார். மலைகளை சுற்றி 30 மைல்கள் நேற்றைய தினம் என்ன-! கண்கள்.
148. அவன் என்ன கூறினான்; அதற்கு அவன், “ரபி நீர் தேவனுடைய குமான் நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான்: யூதர்கள் மட்டும் அதை அடையாளம் கண்டு கொண்டு இருந்தால் இப்பொழுது பொறும் அது தெரிந்து கொள்ளப்பட்ட யூதன் தெரிந்து கொள்வதிலே எத்தனை பேர்களுக்கு விசுவாசம் உண்டு-? ஓ, அநேக ஜனங்கள் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் புரிகின்றதா-? வேதம் அவ்விதமாக கூறுகின்றது; ஆனால் அந்த மனிதனோ தேவனுடைய ஆவியை தன்னில் உடையவனாக இருந்தான் அவன் அதை அறிக்கைச் செய்தான்; “ரபீ நீர் தேவனுடைய குமாரன் நீர் இஸ்ரவேலின் ராஜா என்று” கூறினான்.
149. ஆனால் அந்த நாளில் வேத சாஸ்திரிகளும், ஆசாரியர்களும் மகத்தான போதகர்களும் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் அவர்கள் என்ன கூறினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா-? அவன் ஒரு குறிசொல்லுகிறவன், பெயல்செபூலின் ஆவியை தன்னில் கொண்டவனாக இருக்கிறான் என்றார்கள். அவர்கள் சத்தமாக கூறவில்லை. இல்லை. இல்லை.
150. ஆனால் இயேசு அப்படியே திரும்பி அவர்களை நோக்கி பார்த்தார், அவர் நீங்கள் அந்த விதமாக என்னை அழைத்து உங்களுக்கு ஒன்றும் நேராமல் போகலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரவேண்டியதுதான ஒரு நேரம் வரும் அப்பொழுது நீங்கள் அவருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு மன்னிக்கப்பட மாட்டாது என்று கூறினார்.
151. அப்படியானால் நாம் எதை குறித்து இடைப்படுகிறோம், அது யூதர்களை குறித்து, அசலான, உண்மையான, உத்தமமான யூதர்கள் அவர்தான் மேசியா என்று விசுவாசித்தார்கள்.
152. வேத சாஸ்திரிகளும் போதகர்களும் அவர்கள் என்னவாயிருந்தார்கள் நாம் பார்த்து வந்த காரியங்களின் ஊடக பார்த்தபடி சர்ப்பத்தின் வித்தாய் இருக்கிறார்கள். அவர் சொன்னார், “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்” என்றார், இருந்தாலும் அவர்கள் சாமர்தியம் உள்ளவர்களும் புத்திக் கூர்மையானவர்களும் பரிசுத்தமான மனிதர்களுமாய் இருந்தார்கள். அவர்கள் ஒரு வைக்கோலை கூட அசைக்க மாட்டார்கள் பரிசுத்தமானவர்கள். அவர்கள் ஒய்வு நாளை மீற மாட்டார்கள் அவர்கள் மாமிசம் புசிக்க மாட்டார்கள் அவர்கள் பரிசுத்தமான மனிதர்கள் ஆனால் அவர்களோ அதை காண தவறித் விட்டார்கள். பாருங்கள் அவர்கள் மனிதர்களால் பயிற்சிவிக்கபட்டார்கள்.
தேவன் அவருடைய மனிதர்களுக்கு கரடுமுரடான பயிற்சியை தான் அளிக்கிறார் தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்கள்-! அந்த விதமாகத்தான் அந்த யூதர்கள் கருதினார்கள்.
153. அந்த விதமாகத்தான் அவர் தம்மை யூதர்கள் அறிந்து கொள்ளும்படியாக செய்தார். அது வேத வார்த்தையின் படியாய் இருக்கிறது என்று எத்தனை பேர்களுக்கு தெரியும்-? சரி இப்பொழுது யூதர்கள் தம்மை அறிந்து கொள்ளும்படியாக அவர் செய்திருப்பார் ஆனால் அது நேற்று யூதர்களோடு இருந்த இயேசுவாகும்.
154. இப்பொழுது நீங்கள் கூறலாம், “சமாரியர்களும் அவர் வரும்படியாய் காத்துக் கொண்டு இருந்தார்களே” என்று சொன்னீர்கள்: “ஆம் அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் தான்: ஆனால் புறஜாதியார் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கவில்லை சமாரியர்கள் மட்டும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
155. அவர் முதலாவதாக சமாரியர்களை சந்தித்த போது அவர் சமாரியாவின் வழியாய் போக வேண்டிய அவசியம் உண்டாயிருந்தது, அவர் அங்கே தங்கி அவருடைய சீஷர்களை சுமார் 12 மணி அளவில் ஆகாரம் கொள்ளும்படியாய் அனுப்பிவிட்டார், அவர் அங்கே ஒரு கிணற்றண்டை உட்கார்ந்தார். அங்கே ஒரு ஸ்திரியானவள் வெளியே புறப்பட்டு வந்து கொண்டிருந்தாள், இந்த தேசத்தில் ஒரு துர்கீர்த்தியுள்ள ஒரு ஸ்திரியாக இருந்தாள் விபச்சாரி என்று உங்களுக்கு தெரியும். ஆக அவள் புறப்பட்டு வெளியே கிணற்றண்டை வந்து, தண்ணீர் மொண்டு போகும் படியாக கிணற்றுக்குள்ளாக அவளுடைய வாலியை இறக்கினாள். அப்பொழுது, “ஸ்திரியே தாகத்துக்கு தண்ணீர் கொடு என்ற ஒரு சத்தம் கூறுகின்றதை” கேட்டாள். அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் அங்க ஒரு நடுத்தர வயது உள்ள யூதன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
156. அப்பொழுது அவருக்கு வயது 30 ஏதோ இருந்தது ஆனால் அவர் 50 வயது உள்ளவர் போன்று காணப்பட்டார் என்று வேதம் கூறுகின்றது. அவர்கள் உனக்கு, “இன்னும் 50 வயது ஆகவில்லையே நீ ஆபிரகாமை கண்டாயோ” என்று கூறினார்கள். அவர் சொன்னார், “ஆபிரகாம் உண்டாக்குவதற்கு முன்னமே நான் இருக்கிறேன்,” என்றார். புரிகின்றதா-? அவருடைய வேலையின் காரணமாக ஒருவேளை அவருடைய மனுஷீக சரீரம் ஒரு விதமாக வயதானவர் போன்று காணப்பட்டு இருக்கலாம்.
158. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் அவர் ஒரு யூதர் என்று அவள் அறிந்திருந்தாள். ஐயா, “இப்படிப்பட்ட காரியங்களை நீர் ஒரு சமாரியரிடத்தில் கேட்பது யூதர்களுக்கு வழக்கம் இல்லையே நம்மிடையே ஒருவருக்கொருவர் எந்த சம்பந்தமும் கிடையாது என்று” அவள் சொன்னாள்.
159. அதற்கு அவர், “ஸ்திரியே நீ யாரிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தாள் நீ என்னிடத்தில் தாகத்திற்கு கேட்டிருப்பாய், நான் உனக்கு கொடுக்கும் தண்ணீர் நீ திரும்ப இங்கே தண்ணீர் மொண்டு போக வேண்டி இருக்காது” என்றார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார் அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொண்டிருந்தார். கவனியுங்கள். அவர் தம்மைத் தாமே இப்பொழுது சமாரியர்களுக்கு அறிவிக்கப் போகிறார்.
160. அவள், “ஏன் நீங்கள் எருசலேமில் இருக்கிற ஸ்தலத்திலே தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்கள்; நாங்கள் இந்த மலையிலே தொழுதுக்கொள்ள வேண்டும் என்று இருக்கிறோம் என்றாள்.
161. அவர் சொன்னார், “நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல எங்கும் தொழுது கொள்ளும் காலம் வருகிறது இப்பொழுதே வந்திருக்கிறது: ஆனால் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவளாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார் என்றார்.
162. அவர் என்ன செய்துக்கொண்டிருந்தார். அவளுடைய ஆவியை பிடித்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கழித்து அவளுடைய தொல்லை என்ன என்பதை கண்டறிந்து. அவளுடைய தொல்லை என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும். அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் ஆறாவது புருஷனோடு ஜீவித்து கொண்டிருந்தாள். எனவே, “அவர் ஸ்திரியே நீ போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு இங்கே வா” என்றார்.
அதற்கு அவள், “எனக்கு புருஷன் இல்லை” என்றாள்.
163. அதற்கு அவர் அது சரியே; உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் இப்பொழுது நீ ஜீவித்துக் கொண்டிருப்பவனும் உன் புருஷன் அல்ல என்றார்:
164. அவள் அப்படியே நிறுத்தி அவரை நோக்கி பார்த்தாள். இப்பொழுது, “நீர் ஒரு பெயெல்செபூல் ஐயா நீர் ஒரு குறிசொல்லுகிறவர் என்றெல்லாம்” அவள் கூறவில்லை; ஜெபர்சன்வில்லிலே போதகர்களில் பாதி பேர்கள் தேவனை குறித்து அறிந்திருப்பதைக் காட்டிலும் அவள் அதிகமாக அறிந்திருந்தாள். அது சரி தான். ஒரு விபச்சாரியாக இருந்து கொண்டு அதை அறிந்திருந்தாள்.
165. அவள், “ஆண்டவரே நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன்” என்று கூறினாள்; கவனியுங்கள். தீர்க்கதரிசி: தீர்க்கதரிசி என்ற வார்த்தையை பின்னிட்டு தொடர்ந்து பார்த்தால் மோசே கூறியுள்ள அந்த தீர்க்கதரிசிக்கு அது வரும், புரிகின்றதா-? உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னை போலொத்த ஒரு தீர்க்கதரிசியை எழும்ப பண்ணுவார்.
166. அவள், “ஆண்டவரே நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன்” என்று கூறினாள்: வேறு எந்த வழியிலும் அவர் அறிந்திருக்க முடியாது என்று அவள் அறிந்திருந்தாள். அறியவே முடியாது. அவள், “ஆண்டவரே நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன்” என்று கூறினாள். இங்கே நன்றாய் கவனியுங்கள். சமாரியர்களாகிய நாங்கள். இப்பொழுது யூதர்கள் அல்ல. ‘சமாரியர்கள்: “மேசியா வரும் போது இந்த காரியங்களை எல்லாம் அவர் எங்களுக்கு அறிவிப்பார் என்று நாங்கள் அறிவோம்” என்றாள். எந்த விதமானதொரு அடையாளத்தை அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டு இருந்தார்கள். பாருங்கள். மேசியாவின் அடையாளம்; “மேசியா வரும் போது இந்த காரியங்களை எல்லாவற்றையும் எங்களுக்கு அறிவிப்பார்; ஆனால் நீர் யார்?” என்றாள்:
அதற்கு அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார்:
167. அவள் தன் குடத்தை அங்கேயே வைத்துவிட்டு ஊருக்குள்ளே ஓடிப் போய்; “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்கு சொன்னார்: அவரை வந்து பாருங்கள்; அவர் மேசியா தானோ” என்றாள்.
168. அப்பொழுது அது மேசியாவின் அடையாளமாக இருந்தது என்றால் இன்றைக்கும் அது மேசியாவின் அடையாளமாக இருக்க வேண்டும். நினைவிருக்கட்டும் அந்த அற்புதம் ஒரு புறஜாதியர் முன்பும் ஒரு முறை கூட செய்யப்பட்டதே கிடையாது. அது தவிர்க்கப்பட்டது. ஏன்? புறஜாதியாருக்கு இரண்டாயிரம் வருடங்களாக சபை சாஸ்திரம் இருந்து வந்தது.
169. ஆனால் இப்பொழுதோ புறஜாதியாரின் கால கட்டம் இங்கே முடிகின்றது. கம்யூனிஸ்ட்டுகளாகிய ருஷ்யா ஒரு வெடிகுண்டை நம்மை நோக்கி வைத்து இருக்கிறது, அது நம்மை அழித்தும்க்கூடவிடும். கவலைப்படாதீர்கள் அது வந்து கொண்டிருக்கிறது. வேதம் அந்தவிதமாக கூறுகிறது. உங்களுடைய பெயர் அதன் மேல் எழுதப்பட்டதாக அது இங்கே இருக்கும், ஒரு நொடி பொழுதில் முழு தேசமே தூள் தூளாகி விடும், அது முற்றிலுமாய் அக்கினியால் அழிக்கப்பட்டு போகும். கவனியுங்கள். தேவன் அதை செய்கிறதாய் இருக்கிறது. அவர்கள் ஒரு சுதந்திர ஏகாதியபத்தியம். அவர்கள் ஒரு கூட்ட அஞ்ஞானிகள் என்று எனக்கு தெரியும். ஆனால் கடந்து போன காலங்களில் இஸ்ரவேலை ஒழுங்குக்கு கொண்டுவர தேவன் அஞ்ஞான தேசத்தை எழுப்பவில்லையா-? ருஷ்யாவும் கம்யூனிஸ்சமும் இந்த பூமியின் மேல் ஜனங்களை முழுவதுமாக நீக்கி போட கர்த்தருடைய கரத்தில் இசைவாய் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று வேதம் உரிமை கோருகிறது. ஆனால் அது சம்பவிப்பதற்கு முன்னாக எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது.
170. ஆனால் அது சம்பவிப்பதற்கு முன்னாக சபையானது வீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது அவ்வளவு சமீபத்தில் இருக்குமானால் எடுத்துக் கொள்ளப்படுதல் எவ்வளவு சமீபத்தில் இருக்கும். அதை காட்டிலும் சமீபமாய் இருக்கும். ஆகையினால் நான் ஏன் நான் பிரசங்கிக்கின்ற விதமாய் பிரசங்கித்து கொண்டிருக்கிறேன். நான் அவ்வளவாய் என்னால் முடிந்தளவு கடினத்தோடு போராடுகின்றேன் என்பதை உங்களுக்கு புரிகின்றதா-? தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்குள்ளாக அது செலுத்தி ஸ்த்ரியின் வித்தை வெளியே எடுத்து அதனால் சர்ப்பத்தின் வித்தானது தண்டனையை எடுத்துக் கொள்ளும்படியாய் தேவன் அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார். அது முற்றிலும் சரியே. அவர் அதை தான் செய்வேன் என்று வாக்களித்து இருக்கிறார்.
171. இப்பொழுது இயேசுவானவர் யூதர்களுக்கு முன்பாகவும் சமாரியருக்கு முன்பாகவும் அந்த அடையாளங்களை செய்து தம்மைத்தாமே அறிவித்து அதே அடையாளங்களைக் கொண்டு நமக்கு அவரை அறிவியாமல் போனால் அவர் அநீதி உள்ளவராய் இருப்பார், நாங்கள் மெதடிஸ்டுகள் நாங்கள் பாப்டிஸ்டுகள் நாங்கள் கத்தோலிக்கர்கள் நாங்கள் பிரெஸிபிடரியர்கள் என்று கூறும் படியாய் நம்மை அப்படியே விட்டுவிடுவாரா-? இல்லை ஐயா, ஒரு குளிர்ந்து போன மதசாஸ்திரத்தோடு போகும்படியாய் விட்டுவிடுவாரா-? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.
172. ஆனால் முதல் முறையாக அவர் செய்தது போலவே அவர் அடையாளங்களோடும் அற்புதங்களோடும் வரவேண்டும். நாம் அந்த நாளை வந்து அடைந்திருக்கிறோம் இப்பொழுது நாம் இங்கே இருக்கிறோம். வேதத்தின் படியாக ஆவியின் படியாக விஞ்ஞானத்தின் படியாக எல்லா காரியங்களும் இங்கே அது இருக்கிறது என்று நிரூபிக்கிறது. ஓ! ஜனங்கள் புரிந்து கொள்ளும்படியாக அதை அவர்களுக்கு உள்ளாக அழுத்தி தள்ளுவதற்கான பலம் எனக்கு இருக்கக்கூடாதா என்று விரும்புகிறேன்.
173. இங்கே ஜெபர்சன்விலேவில் இருக்கின்ற ஜனங்களாகிய நீங்கள், என்னுடைய ஜனங்கள் நான் உங்களோடு கூட வளர்க்கப்பட்டேன் நான் உங்களை நேசிக்கிறேன். என்னை ஒரு மத வெறியன் என்று நினைக்காதீர்கள். இந்த முன்னறிவிப்புகள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள் ஜனங்களே! 1937-ம் வருடத்தின் வெள்ளத்தை திரும்பிப் பாருங்கள் இங்கே இந்த சபையில் ஜனங்களாகிய நீங்கள் அப்பொழுது நகைதீர்கள், ஸ்பிரிங் வீதிக்கு மேல் 22 அடி உயரத்திற்கு வெள்ளம் எழும்பும் என்று அது சம்பவிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் நான் கூறினேன். எதாவது காரியம் ஒரு முறையாவது கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறி அது சரியாக அப்படியே உண்மையாகவே சம்பவியாமல் போய் இருக்கிறதா-? அவர் கூறி சம்பவியாமல் போன காரியம் ஏதாவது எப்போதாவது இருந்ததுண்டா-? அது சத்தியமாய் இருக்கிறது. அது இன்னமும் சாத்தியமாகவே இருக்கிறது, அது எப்பொழுதும் சாத்தியமாகவே இருக்கிறது.
174. ஜெபத்திற்காக நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், அவர்கள் எல்லாரையும் ஒரே நேரத்தில் கொண்டு வர முடியாது. ஒரு நேரத்தில் நம்மால் முடிந்ததை நாம் ஜெபத்தில் கொண்டு வருவோம் பின்னர் தொடர்ந்து அவர்கள் எல்லாருக்கும் இங்கு வரும் வரைக்குமாய் ஜெபிப்போம். இப்பொழுது நான் ஜெபிக்க தொடங்க போகிறேன் என்று நினைக்கிறேன் பில்லிபால் இங்கு இல்லையா-? அவன் அங்கே எங்காவது பின்னால் இருக்கிறானா-? அவனை இங்கே வரச் சொல்லுங்கள் அவன் என்ன அட்டைகளை கொடுத்திருக்கிறான் என்று தெரிய வேண்டும். நீ என்ன ஜெப அட்டை கொடுத்திருக்கிறாய்-? ‘Q’ எழுத்திட்ட ஜெப அட்டைகளா-? உங்கள் ஜெப அட்டைகளில் Q என்ற எழுத்து இருக்கிறதா என்று பாருங்கள், ஒன்றிலிருந்து நூறு வரையிலும் சரி அவர்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கொண்டுவர முடியாது, ஆனால் அதில் சிறிதளவை ஒரே நேரத்தில் நம்மால் கொண்டு வர முடியும் ஆனால் எல்லாரும் வரும் வரைக்குமாய் ஜெபிக்கலாம். அவர்கள் ஒருவர்பின் ஒருவராக வர நான் விரும்புகிறேன் அவர்கள் எல்லாருக்கும் ஜெபிக்கும் வரைக்கும் அவர்கள் வரவும்.
175. இப்பொழுது பாருங்கள் எல்லாரும் உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற எல்லாரும் இதை சிந்தியுங்கள் கூட்டம் முடிய போகின்றது. நான் இந்த சபையை போதகரிடத்தில் ஒப்படைக்கிறேன் பாஸ்டர் நெவில் உங்களை அவரிடத்திலும் அவரை தேவனிடத்திலும் ஒப்படைக்கிறேன். சகோதரர் நெவில் இங்கு இருக்கின்றாரா பின்னால் இருக்கின்ற உங்கள் யாவரையும் தான் அழைப்பேன். நெவில் ஒரு தைரியமுள்ள போர் வீரன். அவர் ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஊழியக்காரன் முன்னாள் மெதடிஸ்ட் போதகர். அஸ்பரிலிருந்து வந்த ஒரு மாணவன் என்று நான் நினைக்கிறேன். அவர் எல்லா மத சாஸ்திரிகளாலும் மதசாஸ்திர குருமார் பள்ளியும் பயிற்சி பெற்று அவர்கள் போதிக்கின்றவைகளிள் அனுபவம் உள்ளவர். ஆனால் ஒரு நாள் ஏதோ வித்தியாசமானதைத் தான் உடையவனாக இருக்க வேண்டும் என்ற கட்டத்திற்குள் வந்து கோட்டை தாண்டினான். அவர் இங்கே ஒரு போதகனாய் இருக்கிறார் ஆவியினால் நிறைந்த ஒரு மனிதன் ஒரு உண்மையான போதகர் ஒரு உண்மையான மத சாஸ்திரி. இந்த பட்டணத்து ஜனங்களே இந்த சமுதாயத்துக்குள் இருக்கிற உங்களுக்கு சபை இல்லாமலிருந்தது உங்களுக்கு உண்மையான சுவிசேஷத்தை கேட்க விரும்பினால் இங்கே வந்து சகோதரர் நெவில் பேசுவதைக் கேளுங்கள் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன், நான் செய்கின்ற அதே காரியத்திற்காக அவரும் நிற்கிறார். முற்றிலுமாக உண்மையான தைரியமுள்ள போர் வீரன். இங்கே இருக்கின்ற நாம் எல்லோரும் சகோதரர் நெவிலை நேசிக்கிறோம். அவர் நம்மோடு இங்கே நீண்ட காலமாக இருக்கிறார் நாம் அவரை நேசிக்கிறோம்.
176. இப்பொழுது இயேசு கிறிஸ்துவானவர் ஆவியாய் இன்றிரவு திரும்பி இங்கே வருவார் ஆனால் அவர் பூமியின் மேல் இருந்த போது யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் செய்த அதே காரியங்களை புறஜாதியார் ஆகிய உங்களுக்கும் அதே காரியங்களை செய்வார். உங்களின் எத்தனை பேர் நான் அவரை என் முழு இருதயத்தோடும் விசுவாசித்து அதை சரியாக இங்கேயே ஏற்றுக் கொள்வேன் என்று கூறுவீர்கள்.
177. நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் அக்கறையில்லை, “நான் மெதடிஸ்டு சபைக்கு போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா-?” இல்லை, ஐயா. பாப்டிஸ்ட்டு சபைக்கு: இல்லை, ஐயா.
178. நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்கள் ஏனென்றால் அந்த சபைகளிலும் தேவன் அவருக்கு பிள்ளைகளை உடையவராக இருக்கிறார். நிச்சயமாக அவருக்கு இருக்கிறார்கள் ஒருக்கால் நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கலாம். நீங்கள் பிரன்ஹாம் ஜெபகூடாரத்தில் ஒரு அங்கத்தினராய் இருப்பவர்களை போன்று உங்களையும் நேசிக்கிறேன். என்னை பொருத்தமட்டில் அதில் ஒரு புள்ளிக்கூட வித்தியாசத்தை உண்டு பண்ணாது. எல்லா இடத்திலும் ஊழியத்தின் மூலமாக நீங்கள் அதை அறிந்து இருக்கிறீர்கள். தேவன் அவருடைய பிள்ளைகளை நேசிக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை குறித்து அவருக்கு அக்கறை இல்லை. உங்களுடைய இருதயத்தில் நீ என்னவாக இருக்கிறாய் என்பதே அவருக்குத் தேவை ஆனால் நாங்கள் உங்களை ஐக்கியத்திற்கு அழைக்கிறோம். நீங்கள் வருகிறதை நாங்கள் வரவேற்கிறோம்.
179. இப்பொழுது யாவருக்கும் தெரியும் ஜெபர்சன்வில்லிருக்கின்ற ஜனங்களாகிய உங்களுக்கு தெரியும் உரைக்கப்பட்டதும் செய்யப்பட்டதும் முன்னறிவிக்கப்பட்டதுமான அனேக காரியங்களுக்கு பின்பும் அவைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு பரிபூரணமாக நிறைவேறியது என்று. அது உண்மையாய் இருக்கின்றது என்று ஜெபர்சன்வில்லில் எத்தனை பேர்களுக்கு தெரியும். இப்பொழுது இங்கே இருப்பவர்களில் அதை அறிந்தவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது பட்டணத்திற்கு வெளியே இருந்து வருகிற உங்களைத் தான் நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா-? பட்டணத்திற்கு வெளியே வந்தவர்கள் என்னுடைய கூட்டங்களுக்கு வந்து அது சரியாக கூறுகிறபடியே சம்பவித்ததை கண்டவர்கள் எத்தனை பேர்கள் ஜெபர்சன்வில் ஜனங்கள் காணும்படியாக உங்கள் கரங்களை உயர்த்துங்கள். புரிகின்றதா-?. இரண்டு அல்லது மூன்று காட்சிகளால் காரியங்கள் நிலைவரப்படும் என்று வேதாகமம் கூறுகிறது. உலகம் முழுவதும் அப்படியாக இருந்து வருகிறது. அப்படியானால் நாம் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தராகிய இயேசுவினால் எல்லா காரியங்களும் நம்முடைய கரங்களில் நான் உடையவர்களாக இருக்கிறோம். எல்லா காரியங்களையும் அவர் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்.
180. இப்பொழுது நாம் ஜெப வரிசையை துவங்குவோம். இயேசு கிறிஸ்து இன்றிரவு அதை நடப்பிப்பார்.
181. இப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் படத்தை அந்த ஒலியை குறித்து உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். உண்மையில் பார்க்கப் போனால் நீங்கள் எல்லாருமே அதை குறித்து அறிந்திருக்கிறீர்கள் அது வாஷிங்டன் டி.சி.யில் இருக்கிறது. (எக்கர் ஹூவர்) அவரிடமிருந்து சிறந்த ஒரு மனிதனால் கைரேகை நிபுணர் ஆகிய ஜார்ஜ். ஜே. லேசி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டதாய் அங்கே இருக்கிறது. அவருடைய கையெழுத்திட்ட தாஸ்தாவேஜுகள் எங்களிடத்தில் இருக்கிறது. ஒரு சமயம் அது போலியான மனோதத்துவம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதாவது ஜனங்களின் சிந்தையை வசீகரிப்பது போன்று நினைத்து கொண்டிருந்தேன். அவர் சொன்னார், “ஆனால் சகோதரன் பிரான்ஹாம் புகைப்படக் கருவியின் இயந்திர கண்ணாடி மனோதத்துவத்தை படமாக எடுக்க முடியாது. வெளிச்சமானது பூத கண்ணாடியின் மீது பட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார். அவை எல்லாவற்றையும் நாங்கள் காகிதத்தில் எழுதி வாங்கி வைத்துள்ளோம். அந்த படத்தோடு கூட அது பிரசுரிக்கப்படும். வெளிச்சம் பூதக் கண்ணாடியின் மேல்பட்டது.
182. நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்றைய தினம் நான் நதியில் ஞானஸ்தானம் கொடுத்து கொண்டிருந்த போது முதல் முறையாக ஜனங்கள் முன்பாக தோன்றின அந்த வெளிச்சத்தை கண்டவர்களில் எத்தனை பேர் இன்னமும் ஜீவித்து கொண்டு இருக்கிறீர்கள். இக்கட்டிடத்திற்குள் இருப்பவர்களில் அதை கண்டவர்கள் கரங்களை உயர்த்தி காட்டுங்கள். அது தோன்றி கீழேயிறங்கி வந்த போது கர்த்தருடைய செய்தியானது வந்தது. அதை கண்டு இன்னமும் ஜீவித்து கொண்டுயிருக்கிறார்கள். அங்கே மூன்று அல்லது நான்கு கரங்கள் இருக்கின்றது. இன்னமும் அதே விதமாய் மாறாதவராயிருக்கிறார். அங்கே அது என்ன கூறினதோ அதை அது செய்ததா-?. அதாவது நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கிற ஊழியமானது இயேசு கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகைக்கு முன்னர் உலகம் முழுவதிலுமாக ஒரு எழுப்புதலை துவக்கும் என்பதேயாகும். அது என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள். புரிகின்றதா. அங்கே அதிலிருந்து வெளி வந்து தான் ஓரல் ராபர்ட்ஸ்சும் இன்னும் மற்றவர்களுமாவர். புரிகின்றதா. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு ஜனத்தண்டைக்கும் ஒவ்வொரு பாஷைக்காரரிடத்திற்கும் உலகம் முழுவதுமாக அப்படியே சென்றது. எழுப்புதல் அக்கினி எரிந்து கொண்டு இருக்கிறது மகத்தான சுகமளிக்கும் ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கின்றது. புரிகின்றதா-?.
183. இப்பொழுது ஆயத்தமாயிருங்கள் உள்ளே வெளியே நீங்கள் எங்கிருந்தாலும் சரி கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
184. இப்பொழுது இது முதற்கொண்டு நான் என்னை கர்த்தராகிய இயேசுவினிடத்தில் ஒப்படைக்கிறேன். அதனால் என்னை நானே முழுவதுமாய் ஆவியானவருக்கு ஒப்புக் கொடுத்து இயேசு கிறிஸ்து மட்டுமே மிகைப்படுவாராக. நான் அல்ல ஆனால் இயேசு கிறிஸ்து மட்டுமே மிகைப்படுத்தப்பட்டு இப்பட்டினத்திற்குள்ளும் வெளியில் இருக்கின்ற இந்த ஜனங்கள். என்னுடைய ஜனங்கள் என்னுடைய நண்பர்கள் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷமானது முற்றிலுமாக சத்தியம் என்று அறிந்து கொள்வார்களாக. அவருடைய வார்த்தையை கொண்டும் அவருடைய ஆவியை கொண்டும் இது தான் சத்தியம் என்று ருபகாரப்படுத்த கிறிஸ்து இங்கே இருக்கிறார்.
185. நாம் அவர்களை ஒருவிதத்தில் ஒருவராக அழைக்கவேண்டும் எனவே நாம் முதலாம் எண்ணில் இருந்து, Q எழுத்திட்ட ஒன்றாம் எண்ணில் இருந்து துவங்குவோம். யாரிடத்தில் அது இருக்கிறது. உங்களால் இப்பொழுது எழுப்பி நிற்க முடியவில்லை என்றால் மூப்பர்கள் உங்களை தூக்கி கொண்டு வருவார்கள். உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் வருவோம். Q Q-எண்-1. சகோதரன் ஹிக்கர்சன், பில்லி பால் அல்லது பொறுங்கள். இங்கே டாக், அவருக்கு உதவி செய்வார். Q-எண்-1 உங்களுடைய கரத்தை நீங்கள் உயர்த்திருவீர்களா-? அது யாரிடத்தில் இருந்தாலும் சரி உயர்த்துங்கள். அது Q-தானா என்று நிச்சயமாகத் தெரியுமா அல்லது. சரி நான் வருந்துகிறேன். சரிதான். நேராக மேலே வாருங்கள் எப்படி என்று அவருக்கு காட்டுங்கள் அங்கே இருக்கின்ற இடையினுடாக வாருங்கள் Q-எண்-1.
186. இரண்டாம் எண். தயவு செய்து கரத்தை உயர்த்துங்கள். சரி அம்மாள் வாருங்கள் நீங்கள் நடந்து நேராக இங்கே வாருங்கள். அங்கே பின்னாலே உட்கார்ந்திருக்கிற அம்மாள். நீங்கள் எல்லாரும் அவர்களுக்கு வழி விடுங்கள். அங்கே இருக்கும் பையன்கள் இன்னும் மற்ற உதவியாளர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். Q-எண்-3 கரத்தை உயர்த்துங்கள். மூன்றாம் எண் உங்களுடைய கரத்தை நீங்கள் உயர்த்திருவீர்களா-? Q-எண்-3 உடையவர்கள் யாராய் இருந்தாலும் கரத்தை உயர்த்துங்கள். இங்கே போய்க் கொண்டிருக்கிறார்களே அந்த அம்மாவிடம் இருக்கிறதா என்று பாருங்கள். உங்களிடத்தில் அது இல்லையா-? நீங்கள் அப்படி அதை செய்ய முடியாது. முடியாதா. முடியாது. நீங்கள் அதை பற்றிக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு செவி கொடுக்க வேண்டும். எப்படியிருந்தாலும் அந்த பிள்ளையை நாங்கள் பார்ப்போம் புரிகின்றதா. உங்கள் எண் அழைக்கப்படும்போது நீங்கள் வரவேண்டும். அந்த குழந்தை அழைக்கப்படும்போது அது வரவேண்டும். புரிகின்றதா. அதெல்லாம் பரவாயில்லை.
187. எண்-1, 2 யாரிடம் மூன்று இருக்கிறது. உங்கள் கரத்தை உயர்த்துங்கள். எண்-3, எண்-4.
188. இப்பொழுது அது யாராய் இருந்தாலும் சரி அதை செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்பினது உங்களின் மகா அருமையான தன்மையை காட்டுகின்றது. புரிகின்றதா. உங்களுடைய எண் அழைக்கப்பட்டால் அவர்கள் வருவார்கள். அவர்கள் அழைக்கப்படவில்லை என்றால் நாங்கள் அவர்கள் அண்டை எப்படி இருந்தாலும் போவோம். புரிகின்றதா. நீங்கள் உங்களுடைய இடத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனால் உங்களுக்கும் கூட உங்களுடைய இடம் கிடைக்கும். பாருங்கள். புரிகின்றதா. சரிதானே.
189. மூன்றாம் எண் நான்காம் எண் ஐந்தாம் Q Q-எண்-5. உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அங்கே பின்னால் ஒரு வாலிப ஸ்திரி. எண் ஆறு. சரி. வாலிப மனிதன். எண் ஏழு. அந்த மனிதன் இங்கே இருக்கிறார். எண் எட்டு.
190. நாங்கள் அதைச் செய்தாக வேண்டும். பாருங்கள். நீங்கள் அதைச் செய்ய முடியாது நீங்கள் எல்லாவற்றையும் குழப்பி விடுகிறீர்கள். எல்லாரும் ஜெபம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூறுகிறீர்கள்.
191. நாங்கள் ஏன் இப்படி வரிசைப்படுத்த வேண்டும் என்பதை காண வேண்டுமானால் நான் உங்களுக்கு ஒரு காரியத்தை காட்டுகிறேன். வந்து ஜெபித்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிற இருக்கின்றவர்கள் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் யாராக இருந்தாலும் சரி உயர்த்துங்கள். யார் முதலில் வர போகிறீர்கள். பார்த்தீர்களா. அங்கு யாராவது ஒருவர் இருக்க வேண்டும்.
192. பில்லி இங்கே வந்து அட்டைகளை எடுத்து அவைகளை உங்களுக்கு முன்பாக கலக்கி வேண்டுமென்கிற யாருக்கும் ஒரு அட்டையை கொடுக்கிறான். உங்களுக்கு ஒருக்கால் ஐந்து ஆறு கிடைக்கலாம் சில சமயங்களில் நாங்கள் எங்கிருந்தாவது துவங்குவோம் எங்கே துவங்குகிறோம் என்பது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது. அப்பொழுது பாருங்கள் மேடை மீது இருப்பவர்களுக்கு முன்பே கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிவர்கள் உண்மையாகவே சில சமயங்களில் சுகம் அடைகிறார்கள். எத்தனை பேர்களுக்கு அது தெரியும் இருவருமே அந்நியர்கள். சரி நிச்சயமாக அதற்கு இதனோடு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
193. எண் ஆறு அந்த ஒருவர் வந்தாரா-? எண் ஏழு, எண் எட்டு யாரிடத்தில் ஜெப அட்டை எண் எட்டு இருக்கிறது-? ஏற்கனவே கிடைத்து விட்டதா-? எண் ஒன்பது,
194. எட்டு எண் எட்டு இப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம் ஒருக்கால் வெளியே இருக்கின்ற யாருக்காவது இருக்கலாம். அவர்களாய் இருப்பார்களே ஆனால் யாரவது அவர்களுடைய கரத்தை தூக்கி காட்டுங்கள் அல்லது ஏதாவது காரியம் செய்யுங்கள் வெளியே இருந்து கொண்டு உள்ளே வர முடியாதவர்கள். எண் எட்டு சகோதரன் காலின் அங்கே பின்னாலே யாராவது இருக்கிறார்களா-? ஜெப அட்டை எண் எட்டு உள்ளே வர முயற்சிக்கிறீர்களா-? சரி ஜெப அட்டை எண் எட்டு,
195. சரி எண் ஒன்பது, ஜெப அட்டை எண் ஒன்பது உங்கள் கரத்தை உயர்த்துங்கள், ஒருக்கால் அவர்கள் வெளியே போய் உள்ளே வர முடியாமல் இருக்கலாம் அவர்கள் உள்ளே வருவார்கள் ஆனால் அவர்களை வரிசையில் நிறுத்துங்கள். எண் பத்து கரத்தை உயர்த்துங்கள். அந்த மனிதன் அங்கே எங்கோ பின்னால் இருக்கிறார். வாரும் ஐயா. நீங்கள் உள்ளே அழைக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். கால்கள் மரத்துப் போகும் அளவிற்கு நீங்கள் அங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்.
196. எண் பத்து எண் பதினொன்று.
197. Q எண்-11 உடையவர்கள் யாராய் இருந்தாலும் சரி உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. பதினொன்று.
பனிரெண்டு. எண்-12. சரி. பனிரெண்டு,
198. பதிமூன்று. பதிமூன்று கரத்தை உயர்த்துங்கள். தயவு செய்து அதனால் என்னால் காண முடியும். ஜெப அட்டை பதிமூன்று. Q-13. பதினான்கு. பதினான்கு. பதினைந்து. பில்லி எத்தனை ஜெப அட்டை கொடுத்திருக்கின்றாய். நூறா-? பதிமூன்று பதினான்கு பதினைந்து காணவில்லை. ஜெப அட்டை பதிமூன்று பதினான்கு பதினைந்து இங்கே நீங்கள் இருக்கிறீர்களா-? பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது.
199. முதலாவது Q எழுத்திட்டது பின்னர் போய் J எழுத்திட்டதை கொண்டு வா. அதன் பின்னர் வரிசையின்வுடாக போ. அவர்கள் அதை எல்லாம் முதலாவதாக ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள். நாம் அதை அழைத்த பின்னர் அப்படியாக நாம் மற்றவர்களுக்கு பார்ப்போம். என்ன கூறுகிறீர்கள்-? அதுதான் பாருங்கள் நான் ஜெப அட்டைகளை இன்று காலையில் கொடுத்தோம். ஒருக்கால் ஜனங்கள் திரும்பி வரவில்லைப்போலும். புரிகின்றதா.
200. நாம் அந்த சிறியதில் துவங்குவோம். நீங்கள் இப்பொழுது உங்கள் வரிசையில் சரியாய் அந்த மட்டத்திற்கு வந்திருக்கீர்களா-? சரி இப்பொழுது யாரிடத்தில் Q-வில் பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது இருக்கிறது. இருபத்தியொன்று இருபத்திரண்டு இருபத்திமூன்று இருபத்திநான்கு இருபத்திஐந்து. இப்பொழுது ஆயத்தமாய் இருங்கள். இது முடிந்தவுடன் துவங்குவோம். இங்கே எங்களுக்கு இப்பொழுது ஒரு முழு வரிசை இருக்கிறது. பின்னர் நாங்கள் நேராக அவனிடத்தில் வந்து அப்படியே வரிசையின் ஊடாக சென்று பின்னர் அப்படியே மீதியுள்ள ஜெப அட்டைக்குள் குதிப்போம். J-எழுத்திட்டவைகளில் நாம் விட்டதிலிருந்து அவைகளில் முடியும் வரைக்குமாக போவோம்.
201. இப்பொழுது ஒரு சில நிமிஷங்கள் உண்மையான பயபக்தியோடு இருங்கள். நமக்கு உட்கார போதுமான இடவசதி இருந்தால் நலமாயிருக்கும். அதை செய்வதற்கு எதாவது ஒரு வழி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நம்மிடத்தில் இல்லையே. ஆனால் இப்பொழுது நீங்கள் அவ்வளவு பயபக்தியாய் இருக்க நான் விரும்புகிறேன். இப்பொழுது இன்னும் நேரம் இருக்கிறது 9 மணிக்கு 10 நிமிடங்கள் இருக்கிறது. இன்னொரு அரை மணி நேரத்தில் ஆராதனை முடிந்து விடும் எனவே இது ஆராதனையின் முடிவு நேரமாய் இருக்கிறது. எனவே இப்பொழுது உண்மையான பயபக்தியோடு இருங்கள் உண்மையிலேயே அமைதியாய் இருங்கள். சுற்றும் முற்றும் திரியாதீர்கள்.
202. இங்கே உள்ளே இருக்கிற எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் இல்லாமல் இருந்து ஜெபித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி எங்கு பார்த்தாலும் கரங்கள். உங்களுக்கு ஜெப அட்டைகள் இல்லை என்றால் நான் உங்களுக்கு சில வேத வார்த்தைகளை கொடுப்பதாக இருக்கிறேன்.
203. ஒரு சமயம் நம்முடைய கர்த்தர் ஒரு மரித்துப் போன குழந்தையை எழுப்பும்படியாய் போய்க் கொண்டிருந்தார். அந்த பிள்ளை இன்னும் மரிக்கவில்லை. சகேயுனுடைய குமாரத்தி. ஒரு ஸ்திரி அவளுடைய இருதயத்திற்குள்ளாக அவர் ஒரு பரிசுத்த மனிதன் என்று நான் நம்புகிறேன், அவர் மேசியா என்று நான் விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டாள். அவளுக்கு எத்தனையோ வருஷங்களாக உதிரப்போக்கு இருந்தது. அவள் கூட்டத்தின் ஊடாக நகர்ந்து சென்று அவருடைய வஸ்திரத்தை தொட்டாள். அந்த கதையை எப்பொழுதாவது வாசித்திருக்கீர்களா.
இயேசுவானவர் அப்படியே நின்று, “என்னை தொட்டது யார் என்றார்-?
204. பேதுரு அவரை கடித்துக்கொண்டு. சரி எல்லாருமே உம்மை தொட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி இருக்க உம்மை தொட்டது யாரென்று கேட்கிறீரே என்றான்.
205. அதற்கு அவர், “நான் பலவீனமானேன் வல்லமை பெலன் எனக்குள்ளே இருந்து போயிருக்கிறது” என்றார்: தரிசனம். அது உங்களுக்கு என்ன செய்கிறதுயென்று பாருங்கள்; “நான் பலவீனமானேன்; பெலன் எனக்குள்ளே இருந்து போயிருக்கிறது” என்றார்:
206. அவர் சுற்றுமுற்றும் பார்த்தார் ஜனங்களுக்குள்ளாக நோக்கி பார்த்தார் முடிவிலே ஒரு ஸ்திரியை கண்டு பிடித்தார். அவள் பயந்து போய் இருந்தால் தான் ஏதோ தவறு செய்து விட்டதாக நினைத்தாள். ஆனால் அவரோ, அவளை நோக்கி பார்த்து: அவளுடைய உதிரபோக்கு நின்று விட்டது என்று கூறி உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று கூறினார்: அது உண்மையென்று எத்தனை பேர்களுக்கு தெரியும்.
207. இப்பொழுது வேதபண்டிதர்களாகிய உங்களுக்குத்தான் நம்முடைய பலவீனங்களை குறித்து பரிதபிக்க கூடிய ஒரு பிரதான ஆசாரியராக நம்முடைய பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து சரியாக இப்பொழுது இருக்கிறார் என்று வேதம் கூறுகின்றதா. எத்தனை பேர்களுக்கு அது தெரியும். சரி நம்முடைய பலவீனங்களை குறித்து பரிதபிக்க கூடிய பிரதான ஆசாரியராக அவர் இப்பொழுதும் இருப்பாரானால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் இருப்பாரானால் அவர் எந்தவிதமாக கிரியை செய்வார். அப்பொழுது அவர் கிரியை செய்தவிதமாகவே இப்பொழுது கிரியை செய்தாக வேண்டும்.
208. அது சரி தானே. அவருக்கு இப்பொழுது மனீஷீக உடல் இல்லை ஏனென்றால் அது தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறது. ஆனால் அவரூடாக கிரியை செய்ய நம்முடைய சரிரங்கள் அவருக்கு இருக்கிறது. நம்மூடாக கிரியை செய்கின்றது அவருடைய ஆவியாய் இருக்கிறது. அவர் கூறின விதமாகவே அது இருக்கிறது. அதாவது நான் உங்களோடுகூட உங்களுக்குள்ளே இருப்பேன். நான் என் பிதாவினிடத்தில் போகிறபடியினால் நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இதை காட்டிலும் அதிகமாய் செய்வீர்கள். அவர் நம்முடைய ஸ்தானத்தில் நிற்பார். புரிகின்றதா. ஆனால் அவருடைய ஆவியினால் அவர் நம்மை அபிஷேகிப்பார்.
209. இப்பொழுது கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்ற உங்களை தான். நீங்கள் இந்த வழியாய் பாருங்கள். நீங்கள் என்னை சகோதரன் பிரான்ஹாம் என்ற முறையில் நோக்கி பார்க்க வேண்டாம். நீங்கள் இந்த விதமாய் கூறுங்கள் கர்த்தராகிய இயேசுவே நீர் ஒரு பிரதான ஆசாரியராகயிருக்கிறீர். நீர் இந்த கட்டிடத்திற்குள் இருக்கிறீர். என்னுடைய பலவீனங்களோடு நான் உம்மை தொட்டு. நான் சுகவீனமாய் இருக்கிறேன் என்று உம்மிடத்தில் கூற நான் விரும்புகிறேன். நீர் அதை எனக்கு உறுதிப்படுத்தி சகோதரன் பிரான்ஹாம் அப்படியே திரும்பி உம்முடைய ஆவியினால் அந்த ஸ்திரிக்கு நீர் கூறினது போன்று எனக்கு கூறும்படியாய் செய்வீராக. அது காரியத்தை தீர்த்துவிடும் என்று கூறுங்கள். நீங்கள் அதை செய்யும்படியாய் நான் உங்கள் விசுவாசத்துக்கு கர்த்தருடைய நாமத்தினால் சவால் விடுகிறேன். இப்பொது அது சரியா அல்லது தவறா என்று பாருங்கள். நீங்கள் அதை தேவனிடத்தில் கேட்டு அது கேட்ட வண்ணமாகவே வருகிறதா என்று பாருங்கள். இப்பொழுது மிகவும் பயபக்தியாய் இருங்கள்.
210. இப்பொழுது உங்களுடைய பிணியாளர்களை கொண்டு வரலாம் அல்லது இது தான் அந்த மனிதனா-! சரி வரிசையில் முதலாவதாக பார்க்கப்போவது வரிசையின் இந்த பகுதி ஆகும்.
211. இங்கே அதிகமான ஜனங்கள் இருக்கிறார்கள், நாங்கள் ஜபர்சன்வில்லேயின் ஜனங்களை விலக்கி வைக்க முயற்சிக்கிறோம் பட்டணத்திற்கு வெளிய இருந்து வந்தவர்களை அனுப்புவதற்கு அவர்கள் உள்ளே போக தள்ளி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இப்படிப்பட்ட வரிசையில் இங்கே சுற்றுப்புறத்தில் உள்ள ஜனங்களாய் இருந்தால் அவர்கள் சொல்லுவார்கள் சகோதரன் பிரன்ஹாமுக்கு ஜனங்களை நன்றாக தெரியும் நிச்சயமாக அது தான் காரியம் என்று. ஆனால் அவர்கள் ஆப்பிரிக்கா இந்தியா ஆசியா ஐரோப்பா உலகத்தை சுற்றிலும் உள்ள மற்ற இடங்களை நிச்சயமாக அவர்கள் கண்டதில்லை.
212. இப்பொழுது இங்கே இருக்கிற இந்த வரிசையில் உள்ள ஜனங்கள் எல்லாரும் எனக்கு அந்நியர்களை போன்று காணப்படுகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் எனக்கு அந்நியர்களா-? அந்நியர்களாயிருந்தால் உங்களுடைய கரத்தை உயர்த்தி காட்டுங்கள். சரி. அது நல்லது தான். இந்த கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்கள் எனக்கு அந்நியர்கள். அல்லது உங்களுக்கு என்ன கோளாறு என்று எனக்குத் தெரியாது என்று எத்தனை பேர்களுக்கு தெரியும். யாராக இருந்தாலும் கவலையில்லை. நிச்சயமாக உங்களுக்கு தெரியாது. பாருங்கள். ஆனால் அவர் அங்கு இருக்கிறார். இப்பொழுது அவர் அப்படி செய்வார் என்று நான் கூறவில்லை. ஆனால் அவர் அப்படி செய்தால். அப்பொழுது அவர் தனியாக இங்கே பிரசன்னமாகி இருக்கிறார் என்று ஆகிறது.
213. இப்பொழுது இங்கே இருக்கிற இந்த மனிதன் அவருடைய கரத்தை உயர்த்தினார் என்று நான் நினைக்கிறேன். அதாவது அவரும் நானும் ஒருவருக்கொருவர் அன்னியர்கள் என்று. நாங்கள் அன்னியர்கள் தான். நான் அந்த மனிதனை என் ஜீவியத்தில் கண்டதேயில்லை. அவர் என்னை அவருடைய ஜீவியத்தில் இது மட்டுமாக கண்டதேயில்லை. நாங்கள் இந்த கட்டிடத்திற்குள்ளாக வந்திருக்கிறோம். இப்பொழுது தான் முதல் முறையாக நாங்கள் ஒருவரை ஒருவர் காண்கிறோம்.
214. இப்பொழுது பிலிப்பு போகிறதையும் நாத்தான்வேலை கொண்டு வருகிறதையும் நாத்தான்வேல் இயேசுவுக்கு முன்னால் வருகிறது பற்றின ஒரு பரிபூரண காட்சி இங்கே இருக்கிறது. அவர் நாத்தான்வேல், நான் இயேசு கிறிஸ்து என்றல்ல. இப்பொழுது நீங்கள் அப்படி சிந்திக்க வேண்டாம். ஆனால் அது வருஷங்களுக்கு பிறகு அப்பொழுது கொடுக்கப்பட்ட ஒரு வாக்குத்தத்தத்தின்படியாக உள்ளது. இங்கே தங்கள் ஜீவியங்களில் ஒருவரை ஒருவர் சந்தித்திராத இரண்டு மனிதர்கள் இருக்கிறார்கள். அப்பொழுது இருந்த அந்த இரண்டு மனிதர்களை போன்று. இயேசுவானவர் அப்படியே மறாதவராய் இருந்தால் அவரால் அவருடைய ஆவியை விசுவாசத்திற்கு இணங்கச் செய்ய முடியும். என்னால் என்னுடைய ஆவியை விசுவாசத்திற்கு கிறிஸ்துவுக்கு இணங்கச் செய்து ஒரு பரிசுத்த ஆவியின் தெய்வீக வரத்தின் மூலமாக அதே அற்புதத்தை நடப்பிக்கக் கூடும். அது சரிதானா? அது இயற்கைக்கு மேம்பட்டதாய் இருக்கிறது. ஒரு அற்புதமா-? நான் அவரை கண்டதே இல்லை என்றால் என்னால் எப்படி அதை அறிந்திருக்க முடியும், இதோ இருக்கிறது என்னுடைய கரங்கள் இதற்கு முன்பு நான் சந்தித்ததே இல்லை இங்கே தான் முதன்முதலாய் நின்று கொண்டிருக்கிறோம் தேவன் அவரை அறிவார் நான் அவரை அறியேன்.
215. இப்பொழுது நினைவிருக்கட்டும் எனக்காக ஜெபித்துக் கொண்டு இருங்கள் இந்த நேரங்களில் சில சமயங்களில் ஆவியானது அபிஷேகம் பண்ணி அதை அவ்வளவாக இப்பொழுது போல செய்கிறது. ஒரு விதமாக ஆகும் வரைக்கும் நீங்கள் அமைதியாய் அமர்ந்திருக்கும்படி நான் விரும்புகிறேன். உண்மையான பயபக்தியோடு இருங்கள் விழித்தெழுங்கள் ஜெபத்தில் இருங்கள்.
216. இப்பொழுது ஐயா உம்மை எனக்கு தெரியாது என்பதை நீர் அறிய வேண்டும் ஆனால் எனக்கு தெரியாத ஏதோ காரணத்தினால் நீர் இங்கே இருக்கிறீர். ஆனால் அது என்னவாய் இருந்தாலும் நீர் என்ன என்று எனக்கு சொல்லாமலேயே அவரிடத்தில் உமக்கு என்ன வேண்டும் என்பதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுவார் ஆனால் அது அவரை நான் கூறின அதே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் அவரை ஆக்குகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சரி, அவர் அதை விசுவாசிக்கிறார். இப்பொழுது கூடிவந்து இருக்கிறவர்களும் அதை வாசிக்கிறார்கள்.
217. கர்த்தர் அவருடைய வேதத்தில் அதை செய்வேன் என்று கூறியிருக்கிறார். இப்பொழுது ஓன்று நான் இங்கே தேவனுடைய வேதாகமத்தோடு உள்ள சத்தியத்தை கூறுகிறவனாய் இருக்க வேண்டும் அல்லது தன்னால் தாங்கி நிற்க முடியாத ஏதோ காரியத்தை வேதாகமம் வாக்களித்து இருக்க வேண்டும் அல்லது நான் ஒரு மாய்மால காரனாக இருக்க வேண்டும் இதுவோ அல்லது ஏதோ ஒன்றாக இருக்க வேண்டும். புரிகின்றதா அது சரியே-! நீங்கள் எங்கே பொருந்துகிறீர்கள் என்று பாருங்கள். ஆயிரக்கணக்கான ஜனங்கள் குறை காண்பவர்கள் இன்னும் மற்றவர்கள் எல்லாருக்கு முன்பாகவும் நான் இதை செய்திருக்கிறேன். ஆனால் அவர் வாக்களிக்கிறார் அவருடைய வாக்குதத்தத்தை அவர் காத்துக்கொள்கிறார் என்பதை நான் அறிவேன்.
218. அது சரியாக எங்கே இப்பொழுது துவங்குகிறதை நான் காண்கிறேன். உங்களை சுற்றிலும் ஜனங்கள் இருக்கிறதை நான் காண்கிறேன் மேடைகள் மேலும் வேளியே நடக்கிறன்ற கூட்டங்கள் மேலும் நாங்கள் சுற்றிலுமாய் யாரும் இருந்ததே இல்லை புரிகின்றதா, இங்கே சுகவீனமாய் இருக்கின்ற ஜனங்கள் இருக்கிறார்கள் அது துவங்கியின உடனேயே உங்களால் அதை உணரமுடியும். அது பரிசுத்த ஆவியாயிருக்கிறது உண்மையாகவே பயபக்தியாய் இருங்கள் அப்படியே பயபக்தியாய் இருங்கள் நாம் பேசும்படியாக, ஆம் ஐயா நாம் இருவரையும் கர்த்தராகிய இயேசு நேசிக்கிறார் ஏனென்றால் இந்த இரண்டு மனிதர்களுக்காக அவர் மரித்தார். நம்முடைய முதல் தடவையான சந்திப்பு உமக்கு தேவை இருக்கும் ஆனால் அந்தத் தேவையை சந்திக்க தேவன் போதுமானவராய் இருக்கிறார் ஏனென்றால் அதைச் செய்வேன் என்று அவர் வாக்களித்திருக்கிறார்.
219. ஆனால் இப்பொழுது மனிதனால் மட்டும் அவனுடைய இருதயத்தில் உத்தமமாய் இருக்க முடிந்தால் ஏதோ காரியம் நடந்து கொண்டு இருக்கிறது என்று அவன் அறிந்திருக்கிறான். அவனால் சரியாக அப்படியே அதை என்னவென்று சிந்திக்க முடியாது. ஆனால் அந்த படத்தில் நீங்கள் காண்கின்ற தூதனானவர் அந்த மனிதனை நெருங்கி நெருங்கி வந்து கொண்டு இருக்கிறார் என்னிடம் இருந்து மறைந்து கொண்டே போகிறார். இந்த மனிதன் இருதய கோளாறினால் அவதிப்படுகிறார் அவருக்கு சர்க்கரை வியாதியும் இருக்கிறது. அது சரியே அதை ஆவியானவர் உரைக்கிறதாவதாகும். அது சரிதான் என்றால் உங்கள் கரத்தை உயர்த்தி காட்டுங்கள்.
220. இப்பொழுது நான் உம்மை கண்டதே இல்லை என்றால் உம்மைக் குறித்து இந்த காரியமும் எனக்கு எப்படி தெரியும்-? ஏதாவது வழியில் அங்கே அவர் அறிந்த அதே விதத்தில் அது சரிதானே-! கூடி வந்திருந்தவர்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-?
221. ஏன் நாம் நம்முடைய நேரத்தை சிறிது நேரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது-? அதனால் நீங்கள் அது யுகம் இல்லை என்பதை காண்பீர்கள். நாம் வேறு எதையாவது எடுத்துக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் வேறு ஏதாவது காரியத்தை நமக்கு வெளிப்படுத்துவாரா என்று பார்ப்போம். அங்கே நின்று கொண்டிருக்கிற அந்த மனிதரிடத்தில் ஒரு நிமிடம் பேசுவோம். ஒருக்கால் அவருடைய வாழ்க்கையில் உள்ள வேறு ஏதாவது காரியம் இருக்கலாம் ஒருக்கால் அவரிடத்தில் ஏதாவது காரியம் தவறாக இருக்கலாம் எனக்கு தெரியாது.
222. நான் என்ன கூறினேன் என்று உண்மையாகவே எனக்கு தெரியாது இங்கே இருக்கின்ற ஒலிப்பதிவைக் கேட்க வேண்டியதாய் இருக்கிறது ஏனென்றால் பாருங்கள் அது ஒரு தரிசனமாய் இருக்கிறது அவர் அதில் எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். ஆம் நான் அதை இப்பொது காண்கிறேன் அது அவர் இரத்தத்தை குறித்தே ஏதோ காரியமாய் இருக்கிறது அது சர்க்கரை வியாதி அவருக்கு சர்க்கரை நீரழிவு நோய் இருக்கிறது அது ஒரு இருதய கோளாறாக ஆகி இருதய நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அது சில காலமாய் அவருக்கு இருக்கிறது. அவர் இந்த பட்டினத்தில் இருந்து வரவில்லை ஆனால் அவர் இண்டியானாவில் இருந்து வருகிறார், பாடண் என்று அழைக்கப்படுகின்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள இடத்தில் இருந்து வருகிறார் நீர். பாடண் என்ற இடத்தில் இருந்து வருகிறீர் அது கர்த்தர் உரைக்கிறதாக இருக்கிறது அதுதான்;
உன்னுடைய ஜீவியத்தில் ஏதோ காரியம் தவறாக இருக்கிறது:
223. இங்கே இனொரு காரியம் இருக்கிறது இங்கே தரிசனத்தில் ஒரு ஸ்திரி தோன்றுகிதை நான் காண்கிறேன், அது உம்முடைய மனைவி அவளுக்கு சற்று சுகம் தேவையாயிருக்கிறது. அவள் ஏதோ ஒருவிதமான இருமலினால் கஷ்ட்டப்படுத்துகிறாள். அவளுக்கு ஆஸ்துமா இருக்கிறது.
224. உன்னுடைய ஜீவியத்தில் ஏதோ காரியம் தவறாக இருக்கிறது: அதை செய்ய நீர் முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்; விசுவாசத்தின் படியாய் நீர் ஒரு பெந்தேகோஸ்தே. ஏனென்றால் சத்தமிட்டு கொண்டும் கரங்களை தட்டிக் கொண்டும் இருக்கின்ற ஒரு பெந்தேகோஸ்தே கூட்டத்தில் நான் உம்மை காண்கிறேன். நீங்கள் புகைப் பிடிப்பதை விட்டுவிட முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் அதை தான் நீங்கள் விட்டுவிட முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். சிகரெட் புகைப்பது. அது அப்படியே சரி தான். அது கர்த்தர் உரைக்கிறதாவதாய் இருக்கிறது. அது தான் உண்மை. இல்லையா. நிச்சயமாக அதுதான். புரிகின்றதா. அவர் இப்பொழுது இங்கே பிரசன்னமாய் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. உங்களுடைய சுகத்தை ஏற்றுக் கொள்ள நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா.
நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
225. தேவனாகிய கர்த்தாவே இப்பொழுது இங்கே பிரசன்னராய் இருக்கின்ற இயேசு கிறிஸ்துவை எழுப்பினவரே. இந்த மனிதன் கர்த்தாவே. தேவனுடைய ஆசீர்வாதம் அவர் மேல் தங்கும்படியாய் இங்கு இருக்கின்றார். அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்கு அருள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
226. உங்கள் வீட்டிற்கு திரும்பி போய் நீங்கள் விசுவாசித்த வண்ணமாகவே இருக்கின்றதா என்று பாருங்கள். அந்த விதமாய் தான் அது இருக்க போகிறது. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.
227. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? வேதாகமத்தை எழுதின சர்வவல்லமையுள்ள தேவன் அவருடைய ஆவி பிரசன்னமாய் இருக்கிறது. இந்த நிமிஷம் மட்டுமாய் நான் இந்த மனிதனை கண்டதேயில்லை என்று அவர் அறிவார். ஆனால் எனக்கு ஒரு காரியம் தெரியும். பரிசுத்த ஆவியானவர் சரியாக இங்கே இருக்கிறார். அவர் என்ன செய்வார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்றே நான் அறிவேன்.
228. இந்த அம்மாள் தானா-? சரி. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களா-?. நீங்கள் என்னை கூட்டங்களில் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் உங்களை எனக்கு தெரியாது. அது சரியே. சரியா. அப்படியானால் நீர் ஏதோ ஒரு நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்.
229. இப்பொழுது இவள் ஒருக்கால் ஒரு கிறிஸ்தவளாக இருக்கலாம். ஒருக்கால் இல்லாமலும் இருக்கலாம். அவள் ஒருக்கால் குற்றம் காணுகிறவளாக இருக்கலாம். அப்படி இருப்பாளானால் என்ன சம்பவிக்கிறது என்று கவனியுங்கள். புரிகின்றதா. அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது.
230. என்னுடைய தாயார் இந்த கட்டிடத்தில் எங்கேயோ உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு வயதான ஸ்திரி. பாவம் அந்த அம்மாளை நான் புண்படுத்த முயற்சிப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. ஒரு வஞ்சிக்கிறவனாய் அவர்களிடத்தில் நான் வருவேனென்று நீங்கள் நினைக்கிறீர்களா. நிச்சயமாக நான் அதை செய்யவே மாட்டேன். அதைவிட நடைபாதையை கடந்து நடந்து வீட்டுக்கு போய்விடுவேன். நான் செய்தியை பிரசங்கித்து விட்டேன் ஆனால் செய்தியோடுகூட போவதெல்லாம் அதுவல்ல. கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். உலகம் அதைக்குறித்து என்ன கூறுகிறது என்பது எனக்கு அக்கறை இல்லை. எப்படி இருந்தாலும் நாம் அதற்காக நிற்க வேண்டும், அதை செய் என்று தேவன் கூறினார்:
231. உம்மை அறியாதவனாய். நிச்சயமாக. நீங்கள் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கையில் ஒரு வேளை அங்கே நூற்றுக்கணக்கான ஜனங்கள் இருக்கலாம். உம்மை அறிந்துக்கொள்ள எனக்கு வழியே இருக்காது. ஆனால் பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரத்தின் காட்சி இங்கே இருக்கிறது. ஒரு மனிதனும் ஒரு ஸ்திரியும் முதன் முறையாக சந்திக்கிறார்கள். நம்முடைய கர்த்தரும் சமாரிய ஸ்திரியும் மறுபடியுமாக சந்திக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் பேசினார்கள் அவளுடைய ஆவியோடு அவர் தொடர்பு கொண்டு அவளுக்குள்ள கோளாறு என்னவென்று அறிந்து அதை அவளிடம் கூறினார். அவள் அவரை மேசியா என்று அடையாளம் கண்டு கொண்டாள். நீங்களும் அதே காரியத்தை செய்வீர்களா.
232. நீங்கள் செய்வீர்கள் கூடியிருக்கிவர்கள் அதே காரியத்தை செய்வீர்களா. அங்கே வெளியே இருக்கும் ஒவ்வொரு ஸ்திரியும் அதே காரியத்தை செய்வீர்களா. தேவன் அதை அருளுவாராக.
233. அந்த ஸ்திரி நரம்பு தளர்ச்சியினால் கஷ்டப்படுகிறாள். அவள் அதை நீண்ட காலமாக உடையவளாய் இருக்கிறாள் அநேக வருஷங்களுக்கு முன்னர். இன்னும் அவளை ஒரு வாலிப பெண்ணாக என்னால் காணமுடிகிறது. ஆனால் அது முக்கியமான காரியம் அல்ல. அவளுக்கு நான் ஜெபிக்க வேண்டுமாம். அவளுக்கு முட்டு வியாதி அவளை முடமாகி இருக்கிறது. அதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்கிறாள்.
“இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா:
234. அவளிடம் இன்னும் சற்று பேசுவோம். பரிசுத்த ஆவியானவர் அதை அருள்வாராக. அந்த ஸ்திரிக்கு ஒரு அயல்நாட்டு உச்சரிப்பு இருக்கிறது. அவளுடைய பெயர் ஹான்சன் அது உண்மை. நீங்கள் இந்த பட்டினத்தில் இருந்து வரவில்லை நீங்கள் கேண்டன் என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் இருந்து வருகிறீர்கள். அது மகத்தான தேசத்தில் இருக்கிறது. அங்கே அதிகமான கோதுமை விளைச்சல் இருக்கிறது. அதன் பெயர் மென்னிசோட்டா என்பதாகும். நீங்கள் அங்கே இருந்து தான் வருகிறீர்கள். அது உண்மை. நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். இப்பொழுது நீங்கள் வீட்டிற்கு போகலாம். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். என்ன கர்த்தர் உங்களுக்கு செய்தார் என்பதை ஜனங்களுக்கு கூறுங்கள்.
235. நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்களாய் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். உங்களை எனக்கு தெரியாது. தெரியாதம்மா. ஆனால் கர்த்தர் உங்களை அறிந்து இருக்கிறார். நீங்கள் ஏதோ நோக்கத்திற்காக இங்கே வந்திருக்கிறீர்கள். எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதை கர்த்தராகிய இயேசு எனக்கு வெளிப்படுத்து வாரானால். அது உண்மை தானா என்பது உங்களுக்குத் தெரியும். நான் வந்து நீங்கள் ஒரு சுகவீனமான ஸ்திரியென்று கூறினால் நிச்சயமாக நீங்கள் ஜெப வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அது காட்டிவிடுகிறது.
236. உங்களுடைய பரிசோதனை உங்களுக்கு ஈரலில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று கூறுகிறது. அது சிரோசிஸ் என்று கூறுகிறார். அது சரியே. அவளிடம் ஒரு நிமிஷம் பேசுவோம். அன்று கிணற்றண்டையில் அந்த ஸ்திரியிடம் பேசின கர்த்தராகிய இயேசுவானவர் இன்றைக்கு இருக்கின்ற அதே இயேசு தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. ஒரு அருமையான ஆவியையை உடையவர்களாய் இருக்கிறது போலிருக்கிறது. நீங்கள் இங்கிருந்து வரவில்லை. நீங்கள் கிழக்கே இருந்து ஓகயாவில் இருந்து வருகிறீர்கள். அது சரியே. டேடன், ஒகயாவில் இருந்து இங்கே வந்து இருக்கிறீர்கள். அது சரியே.
237. நீங்கள் வேறு யாருக்காகவோ ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அது ஒரு பையன். அவனுக்கு இருதயக் கோளாறு இருக்கிறது. அவனுக்கு குடல் புன் இருக்கிறது. ஒரு பயந்த சுபாவம் உள்ள. அப்படி ஒரு மாதிரியான பையன். அது சரியே. நீங்கள் அவனுடைய ஆத்துமாவிற்காக ஜெபிக்கிறீர்கள் ஏன்னென்றால் அவன் இரட்சிக்கப்படவில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாய் இருக்கிறது. அது உண்மை. அது அப்படித்தானே. நீங்கள் சுகமாகபட்டீர்கள். திரும்பி போங்கள். நல்ல தைரியமாக இருங்கள் என்று அவரிடம் கூறுங்கள். இயேசு கிறிஸ்து...
238. உம்மை அறியேன். அம்மாளே உண்மை எனக்கு தெரியாது. தேவன் உங்களை அறிவார். உங்களுடைய கோளாறு என்னவென்று தேவன் என்னிடத்தில் கூறுவாரானால் என்னை அவருடைய ஊழியக்காரனென்று விசுவாசிப்பீர்களா. அவரை ருபகாரப்படுத்துதல். பாருங்கள் நான் என்ன செய்கிறேன் என்றால் ஜெப வரிசையில் இருக்கின்ற ஜனங்கள் அவர் இங்கே இருக்கிறார் என்பதை காண செய்ய வேண்டும் என்பதேயாகும். கூட்டத்தில் ஏதோ ஒரு காரியம் சம்பவித்திருக்கிறது.
239. அங்கே இரண்டு ஸ்திரிகள் நின்று கொண்டிருக்கிறார்கள் இருவரும் மூக்கு கண்ணாடி அணிந்து இருக்கிறார்கள். யாரோ அவர்களுடைய பெலவீனங்களோடு அவரை தொட்டு இருக்கிறார்கள். என்னால் அந்தத் ஸ்திரியை காணமுடிகின்றது. உங்களுடைய காது வலி. இப்பொழுது அது தீர்ந்துவிட்டது. அந்த ஸ்திரியை பாருங்கள். அவள் எந்த அளவிற்கு இவளைப் போலவே இருக்கிறாள் என்று. அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள் என்னால் அவர்களை காண முடிந்தது ஆனால் ஒருவள் அதை செய்து கொண்டிருந்தாள் இன்னொருவளுக்கு ஒன்றும் இல்லை.
240. அதற்கு காரணம் என்னவென்றால் இந்த ஸ்திரியானவள் வேறு யாருக்காகவோ நின்று கொண்டிருக்கிறாள். அது. சரியே. அந்த இஸ்திரி உங்களுடைய அயலகத்தாள். அவளுக்கு மூட்டு வாயுவு இருக்கிறது. நீங்கள் அவளுக்காக நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். ஏனென்றால் அவள் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது வீரமான காரியம். உங்களுடைய கரத்தில் இருக்கும் கைக்குட்டையை அவள் மேல் போடுங்கள். சந்தேகிக்க வேண்டாம். கிறிஸ்துவுக்கு அவளுடைய ஜீவியத்தை ஒப்படைக்க வேண்டும். அந்த மூட்டு வாயுவு அவளை விட்டு நீங்கும் என்று கூறுங்கள்.
241. சகோதரி எதற்காக அழுகிறீர்கள். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா-? என்னை அவருடைய ஊழியக்காரனென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. நீங்கள் எதை குறித்து அழுகிறீர்களென்றும் உங்கள் வாஞ்சை என்னவென்றும் தேவனால் என்னால் கூறமுடியும் என்று விசுவாசிக்கிறீர்களா. நீங்கள் அதை விசுவாசித்தால் கரத்தை உயர்த்தி காட்டுங்கள். அந்தப் பிளவு அவரை விட்டு போய்விடும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. நீங்கள் அதை விசுவாசித்தால் அது போய்விடும். விசுவாசியுங்கள். போதும் சந்தேகமே படாதீர்கள்.
242. எப்படி இருக்கிறீர்கள். நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்கள் என்று யூகிக்கிறேன். கர்த்தராகிய இயேசு நம் இருவரையும் அழைத்து இருக்கிறார். நீங்கள் நல்ல வாலிப ஸ்திரி. ஆனால் நீங்கள் இங்கே உங்களுக்காக வரவில்லை. இதோ நான் காண்கிறது ஒரு மருத்துவமனை வருகிறது. ஒரு படுக்கை. நீங்கள் ஜெபித்துக் கொண்டு இருப்பது உங்களுடைய தாயாருக்காக. அவளை மரணம் நிழல் கொண்டிருக்கிறது. அவளுக்கு சிறுநீரகப்பை கோளாறும் தசை கட்டி வளர்ச்சியும் இருக்கிறது. அவளுக்கு புற்றுநோயும் கூட இருக்கிறது. ஒரு புற்றுநோயின் கருத்த நிழல் அவள் மேல் இருக்கிறது. நீங்கள் அழுதுக் கொண்டிருக்கும்.., கைக்குட்டையை கொண்டு போய் அவள் மேல் போடுங்கள். கர்த்தருடைய நாமத்தினால் அழையுங்கள். சந்தேகிக்காதீர்கள். நீங்கள் சந்தேகிக்கவில்லை என்றால் அதிலிருந்து தேவன் அவளை வெளியே கொண்டு வந்து அவளை சுகமாக்குவார். சந்தேகிக்காதே. கர்த்தருடைய நாமத்தில் போய் விசுவாசியுங்கள்.
243. கிறிஸ்து ஜீவிக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா-?
244. அங்கே ஏதோ காரியம் சரியாய் இருக்கிறது. ஓ அது அந்த இருக்கையில் அங்கே பின்னாக உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்த ஸ்திரி அவள் தலைவலியினால் கஷ்டப்படுகிறாள். அவள் அங்கே கர்த்தரிடத்தில் ஜெபித்து கொண்டிருக்கிறாள். அந்த பிள்ளை அதை கவனித்துக் கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறாள். அவர் உங்களுக்கு செவிகொடுத்தார். சகோதரியே இப்பொழுது அது எல்லாம் தீர்ந்துவிட்டது. நீங்கள் காலூன்றி நின்று அதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுங்கள். அம்மாளே. அதற்காக அப்படியே துதியை செலுத்துங்கள். பாருங்கள்.
245. அவள் தொட்டது என்ன. அவள் என்னை தொடவில்லை. ஆனால் அவள் அந்த பிரதான ஆசாரியரை தொட்டாள். எனக்கு அந்த ஸ்திரியை தெரியாது. என்னுடைய ஜீவியத்தில் அவளை நான் கண்டதே கிடையாது. ஆனால் தேவன் அவளை அப்பொழுது சுகமாகினார். அது இயேசுவை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் ஆக்குமா. நிச்சயமாக அது ஆக்கும். உங்களால் விசுவாசிக்க கூடுமானால் விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லா காரியங்களும் கைகூடும்.
246. அது கூட்டத்தில் உள்ளவர்களை தாக்குகிறது. யாரோ ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாருங்கள். அது எங்கே பெலனும் ஆவியும் அதிகாரமும் செலுத்துகிறதோ அதை பொருத்ததாக இருக்கிறது. அவர் கூற என்னால் தொடர்ந்து போய் அவர் கூறுகின்றது மாத்திரமே அப்படியே கூறமுடியும். எனக்கு தெரியாது. ஓ அது அழுது கொண்டிருந்து இப்பொழுது கண்ணாடியை அணிகிற ஸ்திரியாய் இருக்கிறது. அவள் அழுதுகொண்டு இருக்கிற காரணம் ஆவி அவள்மேல் இருக்கிறது. அங்கே தான் காரியம். நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பது குடல் புண்ணினால் தான். விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். அது உங்களை விட்டு போய் ஒருபோதும் திரும்ப வராது. எனக்கு அந்த ஸ்திரியை தெரியாது. நான் அவளை கண்டதே கிடையாது. அவள் என்னை தொடவே இல்லை. அவள் பிரதான ஆசாரியரை தொட்டு விட்டாள்.
“உங்களால் மட்டும் விசுவாசிக்க கூடுமானால்:
247. அது இன்னொரு ஸ்திரியின் மேல் இருக்கிறது. விரும்புகின்ற யாரையும் இங்கே பார்க்கும்படி நான் விரும்புகிறேன். அழுது கொண்டிருக்கிற அந்த ஸ்திரியை பாருங்கள். சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருக்கின்ற மற்ற ஸ்திரிகளை பாருங்கள். அவளுக்கு பக்கத்தில் இருக்கிற அந்த ஸ்திரிகளை பாருங்கள். அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்கு இருதய கோளாறு இருந்தது. அந்த சிறிய ஸ்திரி உட்கார்ந்து கொண்டு என்னை நோக்கி பார்த்து கொண்டிருக்கிறாள். ஆம். அது. சரியே. உங்களுக்கு இருதய கோளாறு இருந்தது. உங்களுக்கு இருந்தது. இல்லையா. அது உங்களை விட்டு போய் விட்டது. உங்களுடைய விசுவாசம் தேவனோடு தீயை கொளுத்தியது. நீங்கள் அவரைத் தொட்டீர்கள்.
ஒ, “இது அற்புதமாய் இருக்கிறது:
248. அந்த ஸ்திரி சரியாக அங்கே அவளுடைய தலையை தாழ்த்தி ஜெபித்துக் கொண்டிருக்கிறது தெரிகிறதா. நரைத்த தலையையுடைய ஸ்திரி. எனக்கு அன்னியள். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஆம். நீங்கள் அப்படியே திரும்பி அவளை நோக்கி பாருங்கள். அவளுக்கு சிறுநீர் பையில் கோளாறு இருக்கிறது. அதை அவளிடத்தில் எடுத்து போடும்படியாக ஜெபித்து கொண்டிருக்கிறாள். கர்த்தாவே அவர் என்னை அழைக்கும் படியாய் செய்யும் என்று இப்பொழுது ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது சரியே. அது சரியென்றால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். உங்களுடைய ஜெபத்தை நான் எப்படி அறிந்தேன். அது உன்னை விட்டு போய்விட்டது. உன்னுடைய விசுவாசம் உன்னை சுகப்படுத்தியது. வீட்டிற்குபோய் சுகமாய் இருங்கள்.
249. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்களால் விசுவாசிக்க கூடுமானால் எல்லா காரியங்களும் கைகூடும்.
250. இன்னும் அந்த மாகாணத்திலேயே அசைந்து கொண்டிருக்கிறது. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சரியாக கடைசி இருந்து இரண்டாவது அதிகப்படியான இரத்த அழுத்தம். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்தால் சகோதரியே அது தீர்ந்துவிட்டது. நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா-? அவருடைய வார்த்தையின் படியாய் அவரை எடுத்துக் கொள்ளுங்கள். சரி உங்கள் கரத்தை உயர்த்துங்கள். கர்த்தாவே அவர் என்னை அடுத்ததாக அழைக்கட்டும். அந்த அதிகப்படியான இரத்த அழுத்தத்தோடு என்று நீர் அதற்காகத் தான் ஜெபித்துக் கொண்டிருந்தீர். நான் உமக்கு அந்நியன். அது சரியென்றால் உங்கள் கரத்தை அசைத்துக் காட்டுங்கள். சரி. அது உங்களை விட்டு போய்விட்டது. வீட்டிற்கு போய் சுகமாய் இருங்கள்.
251. அது என்னவென்று பார்த்தீர்களா. அது விசுவாசிக்கிறதாய் இருக்கிறது. உங்களால் விசுவாசிக்க கூடுமானால். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. வெளியே அங்கே இருக்கிற ஜனங்களை பாருங்கள். ஜெப அட்டைகளே இல்லை. அல்லது ஒன்றுமே இல்லை. விசுவாசிக்க நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா-? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியின் மேல் இருந்த போது, அந்த விதமாகத்தான் அவர் கிரியைசெய்தாரா-?
252. இங்கே இந்த ஒரு மனிதன் வருகிறாரே. அவரா. சரி. அது என்ன செய்கிறதுயென்று உங்களுக்கு தெரியாது. எல்லாருக்கும் பிரான்ஹாம் ஜெப கூடாரத்திற்கு இப்பொழுது கரத்திற்கு உச்சியில் பாருங்கள். புரிகின்றதா. அந்த விதமாய் எனக்கு கிடைக்கிறதில்லை என்பது உங்களுக்கு தெரியும். அது என்ன-? கர்த்தருடைய ஆவியாயிருக்கிறது.
253. அது அபிஷேக்கின்றது. அபிஷேகம் என்றால் என்ன என்பது அனேக ஜனங்களுக்கு புரிவதேயில்லை. அதற்கு அர்த்தம் சத்தமிடுதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது சந்தோஷம். வல்லமை பயபக்தியாய் வருகிறது. புரிகின்றதா-?. அது கர்த்தருடைய சந்தோஷமாய் இருக்கிறது. இதுவோ கர்த்தருடைய வல்லமையாய் இருக்கிறது. அவரை சொஸ்தமாக்கும். அவரை நன்றாக ஆக்கும். அன்றொரு இரவு ஊமையாய் உட்கார்ந்து கொண்டிருந்த சிறு பெண்ணுக்கும் குருடாய் இருந்த மனிதனுக்கும் இன்னும் மற்றவர்களுக்கும் அவர் என்ன செய்தார் என்று பாருங்கள்.
254. அய்யா. எப்படி இருக்கிறீர்கள். நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியர் என நினைக்கிறேன். நாம் ஒருவரை ஒருவர் அறியோம். எனக்கு உங்களைத் தெரியாது. உங்களுக்கு என்னை தெரியாது. அது சரி என்றால் கரத்தை உயர்த்துங்கள். சரி இது தான் நம்முடைய முதல் சந்திப்பாய் இருக்கிறது. பயபக்தியாய் இருங்கள். இங்கே ஒரு மனிதன் இருக்கிறார். அவர் என்னை விட அதிக இளைஞர். ஒருவருக்கு ஒருவர் தேவனுக்கு முன்பாக எங்களுடைய கரங்கள் உயர்த்தப்பட்டிருக்க. இது தான் எங்களுடைய முதல் சந்திப்பாய் இருக்கிறது. இயேசு இந்த மனிதனை அடைந்திருக்கிறார். அங்கே ஏதோ கோளாறு இருக்க வேண்டும். அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார். எனக்கு தெரியாது.
255. ஆனால் நான் சத்தியத்தை கூறியிருந்தால் தேவன் அநேக சாட்சிகளின் மூலமாக நான் சத்தியத்தை கூறினேன் என்பதை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதாவது அவருடைய தழும்புகளால் குணமானோம் என்பதே. அது கடந்த காலமாக இருக்கிறது. இந்தக் காரியங்களின் மேல் ஏறி போவதற்கு நமக்கு கரடுமுரடான விசுவாசம் இருந்தாக வேண்டும்.
256. இன்றிரவு அந்த புற்றுநோய் மறைந்து போவதைப் பாருங்கள். அந்த கருத்த மரண இருள் அதிலிருந்து உள்ளே வருகின்ற காட்சிகளை இப்பொழுது கவனித்து பாருங்கள். உங்களுடைய அருமையான வைத்தியர்கள் உங்களுடைய உயிரை காப்பாற்ற அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் முயற்சிக்கிறார்கள். ஆனால் தேவன் ஏதாவது காரியத்தை கூறும்போது அவ்வளவு தான். அதை கூறுவது நான் அல்ல. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
257. இங்கே ஜெபித்துக் கொள்வதற்காக சுமார் 200 பேர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது நான் ஒரு நிமிடம் இளைப்பாற விரும்புகிறேன். அதற்கு பின்னர் நாம் ஜனங்களுக்காக ஜெபிக்கத் துவங்குவோம் அவர்களை கொண்டு வாருங்கள். அவர்களை அப்படியே ஒரு வரிசையினுடாக அனுப்புகிறதல்ல. ஆனால் இங்கே நின்று அவர்களுக்காக ஜெபிப்போம். ஜெபித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற அனைவருக்கும் நான் ஜெபிக்க விரும்புகிறேன்.
258. ஆனால் கூட்டத்தின் ஊடாகவும் மேடையின் மீதாகவும் இருக்கின்ற ஜனங்களே. இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார் என்று நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அதை அறிந்திருக்கிறீர்களா. ஒவ்வொருவரும் அதை அறிந்திருக்கிறீர்களா-?.
259. இப்பொழுது உங்களுடைய சிந்தையில் என்றென்றைக்கும் தீர்ந்து போனதாய் இருக்கும் படியாகவே. இந்த மனிதனும் நானும் இங்கே எங்களுடைய கரங்களைப் உயரே உயர்த்தப்பட்டதாய் இருக்க இது தான் முதல் தடவையாக நாங்கள் சந்திக்கிறோம். அவருடைய இரகசியத்தை தேவன் என்னிடத்தில் கூறுவாரானால். கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரிக்கு அவர் செய்தது போன்று. அல்லது பிலிப்புவுக்கு அவர் செய்தது போன்று. அல்லது அவருடைய ஊழியத்தின் கீழ் நோக்கி பார்க்கும் போது அதனுடாக செய்தது போன்று. அவர் அதை செய்வாரானால் அது முற்றிலுமாக அவரே.
கர்த்தராகிய இயேசுவே என்று அது உறுதிபடுத்துமா-?
260. உங்களுக்கு அது அப்படி செய்யுமா ஐயா. உமக்குள்ள கோளாறு என்னவென்று நான் அறிந்துகொள்ள என்னிடத்தில் ஒரு வழியும் இல்லை, ஒரு கருத்தும் இல்லை. நீர் ஒரு பாவியா அல்லது ஒரு கிறிஸ்தவனா என்று கூட எனக்கு தெரியாது. என்னால் உமக்கு கூற முடியாது. அவரால் முடியும். தேவனால் முடியும். ஆனால் என்னால் உனக்கு கூற முடியாது ஆனால் அவர் அதை எனக்கு கூறுவாரானால். ஆனால் நீர் ஒரு கிறிஸ்தவர். ஏனென்றால் என் மேல் இருக்கின்ற ஆவியின் அபிஷேகத்தை உங்களுடைய ஆவி பிடித்துக் கொண்ட மாத்திரத்தில் அது அதனை வரவேற்கிறது. எனவே நீர் ஒரு கிறிஸ்தவர் என்று நான் அறிவேன்.
261. நீங்கள் ஒரு ஆழமான நிழலின் கீழ் இருக்கிறீர்கள். அது இரத்தத்தில் ஏதோ கோளாறாய் இருக்கிறதாகும். நீர் வைத்தியரிடம் போய் பார்த்திருக்கிறீர். அவர்களது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இருக்கிறார்கள். அது அறுவை சிகிச்சை. அதை நான் கேட்கிறேன். இரண்டு வைத்தியர்கள் ஒருவரோடொருவர் ஆலோசிக்கிறார்கள். உங்களுடைய சரீரத்தில் இருந்து ஒரு உறுப்பை எடுத்து விட அதாவது மண்ணீரலை எடுத்துவிட இருக்கிறார்கள்.
262. அது சரியே. நீர் இந்த பட்டணத்தில் இருந்து வரவில்லை. ஆனால் நீர் ஒரு மகத்தான பட்டணத்தில் இருந்து வருகிறீர். அங்கே ஒரு மத சம்பந்தப்பட்ட ஒரு பெரிய பள்ளிக்கூடம் இருக்கிறது. அது வீடன் ஆகும். உங்களுடைய பெயர் கால் ரோட்ஸ். ரோட்ஸ்சும் ஏதும் கூட. கால் ரோட்ஸ் போன்று. சரி. அய்யா. உங்களுடைய முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசித்தால். நீங்கள் உங்கள் வீட்டிற்கு திரும்பி போகலாம். தேவன் உம்முடைய ஜீவனை காப்பாற்றுவார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா.
ஜெபம் செய்வோமாக.
263. கர்த்தராகிய இயேசுவே எங்களுடைய சகோதரிடத்திலிருந்து இந்த பொல்லாததை நான் இப்பொழுது துரத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தேவனுடைய மகிமைக்கு என்று இவர் ஜீவிப்பாராக. ஆமென்.
தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. சந்தோஷித்து கொண்டே உங்கள் பாதையில் செல்லுங்கள்.
264. முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறவர்கள் எத்தனைபேர்.
ஜெபித்துக் கொள்ள போகிறவர்கள் இவ்வளவு பேர் தானா. சரி.
265. சரி. நீங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையிலே உங்களுடைய முதுகு வலி உங்களை விட்டு போய் விட்டது. எனவே நீங்கள் உங்கள் பாதையில் போகலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் சந்தோஷித்து கொண்டே போங்கள். நல்ல தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று கூறிக்கொண்டே போங்கள்.
266. நீங்கள் போய் உங்கள் இரவு போஜனத்தை புசியுங்கள். நீங்கள் ஜெப வரிசையில் வந்து கொண்டிருக்கையில் உங்களுடைய வயிற்று வலி உங்களைவிட்டு நீங்கி போயிற்று. எனவே நீங்கள் போய் உங்கள் வழியில் வேண்டுமானாலும் போகலாம். உங்கள் முழு இருதயத்தோடு மாத்திரம் விசுவாசியுங்கள்.
267. உங்களால் விசுவாசிக்க முடிந்தால் உங்களுடைய மூட்டுவாதம் உங்களுக்கு தொல்லை கொடுக்காது. உங்களால் கூடுமானால் சகோதரனே நீங்கள் தொடர்ந்து சந்தோஷித்து கொண்டும் தேவனை துதித்து கொண்டும் போங்கள். சரி.
268. உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா. எத்தனை பேர் தேவனை விசுவாசிக்கிறீர்கள். இப்பொழுது நான் இங்கே ஒரு வினாடி நிறுத்தப் போகிறேன்.


*******